சிவாஜி கணேசனின் 24 வது நினைவுதினம் ! உற்சாகத்தில் சிவாஜி ரசிகர்கள் !

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24 வது நினைவு நாளை முன்னிட்டு, கலையுலக சாதனையாளர்களை எப்போதும் போற்றி மகிழும் நவீன பைன் ஆர்ட்ஸ் சார்பில், சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர் சிவாஜி ரவியின் ஏற்பாட்டில், இசை கச்சேரி நிகழ்ச்சியுடன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் உள்ள சிவாஜி கணேசனின் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, சிவாஜி கணேசன் நடித்த படங்களின் பாடல்களை உற்சாகமாக கேட்டு ரசித்தனர். குறிப்பாக காலத்தால் அழியாத காவியம் சிவாஜி கணேசனின் நடிப்பு என்பதை நிரூபிக்கும் வகையில், வயதான அவரது ரசிகர்கள் பாடல்களை கேட்கும்போது, தங்களது இளமைக்கால நினைவுகளை அசைபோட்டபடியே ரசித்து மகிழ்ந்தனர்.

ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாளர் சரஸ்வதி ராமநாதன், சிவாஜி கணேசன் உடனான தனது அனுபவங்களை பகிர்ந்து சிவாஜியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதனிடையே வாராஹி அறக்கட்டளைக்கு அன்னதானம் வழங்குவதற்காக மூத்த பத்திரிக்கையாளர் கே எம் சிராஜூதின் சிவாஜியின் பெயரில் நன்கொடை வழங்கினார். பின்னர் பல்வேறு சாதனையாளர்களை கொளரவப்படுத்தி சிவாஜியின் படம் பொறித்த நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.




