சிவபெருமானுக்கு நாட்டியாஞ்சலி செலுத்திய பரதநாட்டிய மாணவிகள் !

மகா சிவராத்திரி தினமான இன்று சென்னை கொரட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில், நிருத்திய நித்யாலயா வழங்கிய ஜம்புகேஸ்வரர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பரதநாட்டிய ஆசிரியர் திருவெற்றியூர் சாதன ராமன் மாணவி ஜி. ஜே பிரிசில்லா மேரி சிறப்பான முகபாவனையுடன் காண்போர் வியக்கும் வகையில் திறமைகளை வெளிப்படுத்தினார்.

அதனைத்தொடர்ந்து UKG மாணவி புகழினியின் நாட்டியம், கொரட்டூர் நிருத்திய நித்யாலயா குழுவினர், சௌமியா, கொளத்தூர் ஶ்ரீ சரஸ்வதி சீனிவாசனின் மாணவி சரஸ்வதி கலா நிகேதன், திருவெற்றியூர் சுரேகா ரோஷனின் ஆதான்ய நாட்டியப் பள்ளி மாணவிகள், நொளம்பூர் ஸ்மிதா செந்தில் குரு ஶ்ரீ அகாடமியின் நாட்டியாலயஷேத்ரா குழுவினர், அண்ணாநகர் மேற்கு தீபஞ்சனா சக்ரவர்த்தி ரிதம் டிவைன் மற்றும் வெல்னஸ் கிளப் குழுவினர், கொரட்டூர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் பரதநாட்டிய திறமைகளை வெளிப்படுத்தினர்.




