நடிகை குஷ்புவின் கொச்சை பேச்சால் பெண்கள் ஆவேசம்
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக கூறி, அதிமுக, பாரதீய ஜனதா கட்சியினர் தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பேசுகையில்.. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. பள்ளிகளுக்கு அருகிலேயே போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது. படிக்கும் வயதில் தவறான பாதைக்கு மாணவ, மாணவியர் செல்வதால் அவர்களின் எதிர்காலம் குறித்து பெற்றோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் முதல்வரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் சரியான விளக்கம் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல் பாஜக மேடையில் நடிகை குஷ்பு கலந்துகொண்டு பேசுகையில்.. தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கும் மகளீர் உரிமைத் தொகை வழங்குவதை, பெண்களுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் பிச்சைக்காசு வழங்கினால் போதுமா ? மதுக்கடைகளை ஏன் மூடாமல் இருக்கிறார்கள் என ஆவேசமாக பேசினார். தமிழ்நாட்டில் பெண்களின் ஆதரவு பெற்ற திட்டமான மகளீர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்தி குஷ்பு பேசும்போது அங்கிருந்த பெண்களே முகம் சுழித்து குஷ்புவை பார்த்துள்ளனர். அதுவும் நடிகை குஷ்பு பேசும்போது பாஜகவின் மூத்த தலைவர் பொண் ராதாகிருஷ்ணன் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
இதுகுறித்து தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் கூறுகையில்.. தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மாதந்தோறும் மகளீர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், உயர்கல்வி மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என குடும்பங்கள் கொண்டாடும் திட்டங்களால் பெண்கள் சந்தோஷமாக இருப்பது நடிகை குஷ்புவுக்கு பிடிக்கவில்லை. அவரது வாழ்க்கை முறை வேறு, நடிகை குஷ்புபோல் மற்ற பெண்கள் வாழ முடியுமா ? என ஆவேசப்பட்டதோடு, நடிகை குஷ்பு தான் பேசியதற்காக தமிழ்நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது வீட்டை முற்றுகையிட்டு மன்னிப்பு கோர வழியிறுத்துவோம் என்றனர்.