ஆலமரமத்தை வெட்டி கடத்தும் கும்பல் ! வருவாய்த்துறை நடவடிக்கை ?..!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ளது பெரியவாளவாடி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் முன்பாக சுமார் 70 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. பேருந்திற்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கும், வயதான பெரியவர்களுக்கும் நிழல் தரும் இம்மரம் அப்பகுதியின் அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வளர்ந்து நிற்கும் ஆலமரத்தை சிறிது சிறிதாக வெட்டி எடுக்கப்பட்டு வருவதாகவும், இதே போன்று மரக்கிளைகளை வெட்டி எடுத்தால் விரைவில் அந்த இடத்தில் ஆலமரம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தேசிய மரமாக கருதப்படும் ஆலமரத்தை சில சமூக விரோதிகள் அனுமதி இல்லாமல் வெட்டி விற்பனை செய்து வருவது அதிகமாகி வருவதாகவும், இது போன்ற சமூக விரோத செயல்களுக்கு வருவாய் துறை அதிகாரிகள் துணை போவதாக சந்தேகம் எழுவதாகவும் புழம்புகின்றனர். இதே நிலை நீடித்தால் பழங்கால மரங்கள் அழிந்து விடும், இதுபோன்ற தவறான செயல்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்தி வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கா.சாதிக்பாட்ஷா