போக்குவரத்து துறையின் அலட்சியத்தால், நெடுஞ்சாலையில் சிதறும் வாகனங்கள் ! பதற்றத்தில் பொதுமக்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைத்துள்ள கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக கோவையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி மற்றும் திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பல்லடம் வழித்தடத்தில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வாகன விபத்துக்கள் அதிகமானதால் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.

நெருக்கடியை குறைக்கும் விதமாக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை, தற்போது பந்தைய சாலையாக நினைத்துக்கொண்டு பைக் முதல் கார், லாரி, பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக இயக்கப்படுகின்றது. இதில் வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள், அரசு பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதும், வாகன ஓட்டிகளை குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அதிக சத்தத்துடன் ஹாரன் அடிப்பதும், பள்ளி கல்லூரி வாகனங்கள் சாலையில் தாறுமாறாக சாலையில் நிறுத்தி மாணவர்களை ஏறுவதும், பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

போக்குவரத்து மிகுந்த நேரத்தில் லாரிகள் நகருக்குள் நுழைய தடை என விளம்பர போர்டுகள் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை கண்காணிக்காமல் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் நெடுஞ்சாலையில் குறிப்பாக காரணம்பே ட்டையில் இருந்து பல்லடம் வரை சுமார் 10 கிலோமீட்டர் வரையிலான சாலையில் கோடங்கிபாளையம் பிரிவு, ஆராக்குளம் பிரிவு, கே.என். புரம், செம்மிபாளையம் பிரிவு, காலிவேலம்பட்டி, அண்ணா நகர், மேற்கு பல்லடம் ஆகிய பகுதிகளில் பெயரளவு வேகதடுப்பு அமைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காரணம்பேட்டையில் அமைக்கபட்டுள்ள போலீஸ் அவுட் போஸ்ட் நினைவு சின்னமாக காட்சி அளிக்கிறது. வட்டார போக்குவரத்து சார்பில் பெயரளவு மட்டும் பணப்பாளையம் பகுதியில் சோதனை நடத்துகின்றனர். மேலும் பெரும்பாளி பகுதியில் தொடர்ச்சியாக வாகன சோதனை மேற்கொண்டு விபத்துக்களை கட்டுப்படுத்த வட்டார போக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




