அடமானம் வைத்து கடன் வாங்கிய வீடு மாயம் ! கூட்டுறவு வங்கி… உண்மையும், பின்னணியும் ! பல்லடம் அருகே பரபரப்பு !

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கள்ளிப்பாளையம் கிராமம். இங்கு துத்தேரிபாளையத்தில் இருந்து வே கள்ளிப்பாளையத்திற்கு செல்லும் வழியில், கடந்த 2006 ஆம் ஆண்டு ஜெய்சக்தி கிளாசிக் சிட்டி லே அவுட்டுகளாக சுமார் 5 ஏக்கர் நிலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு இப்பகுதியில் நடந்த மெகா மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 12.09.2006 அன்று மேற்படி ஜெய்சக்தி கிளாசிக் சிட்டி அமைந்துள்ள இடத்தை தெய்வசிகாமணி என்பவர் கிரையம் பெற்று கடந்த 27.09.2006 அன்று புஷ்ப வள்ளி என்பவருக்கு லே அவுட்டுகளாக பிரிக்கப்பட்ட வீட்டுமனை இடத்தை ரூ.48,000 த்திற்கு 2400 சதுரடி நிலத்தை கிரையம் கொடுத்துள்ளார். பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு 2400 சதுரடி வீட்டுமனை இடத்தை புஷ்ப வள்ளி மணி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். பின்னிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிட் ( நெ. கே. 1917 ) அடமான கடன் வேண்டி மணி மற்றும் அவரது மனைவியும் கூட்டாக ரூ 15,00,00 / விண்ணப்பித்துள்ளனர்.

இதனையடுத்து கூட்டுறவு சங்கம் மூலமாக கடுமையான நிபந்தனைகளுடன் ரூ.15,00,00.00 அடமான கடன் வழங்கினர். 10 ஆண்டு 120 மாத தவணைகளாக மாதம் ரூ.24000/- தவணை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடமான கடன் பத்திரம் (14246/2019) ஆக பல்லடம் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவ செய்யப்பட்டுள்ளது. இதனிடையே 2019 ஆம் ஆண்டு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தால் அடமான கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கள்ளிப்பாளையம் ஊரட்சியின் முன்னாள் தலைவர் செல்வம் சந்தேகமடைந்து, அடமான கடன் பத்திரத்தை பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அடமான கடன் பத்திரத்தில் மேற்படி இடத்தில் 1980 ஆ அளவில் ஆர் சி தார்சு கீழ்தள கட்டிய சுமார் 1834 சதுரடி அளவில் மங்களூர் ஒட்டுவில்லை முதல் தள கட்டிடம் இருப்பதாகவும் மேற்படி சொத்தின் மார்கெட் மதிப்பு ரூ.30,00,000/- எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மேற்படி க.ச.4311, 432 நெ காலியாக உள்ள ஜெய்சக்தி கிளாசிக் சிட்டியில் மேலே குறிப்பிட்டது போல வீடு கட்டப்படவில்லை எனவும் இல்லாத வீட்டிற்கு அடமான கடன் வழங்கியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கட்டாத வீட்டிற்கு கதவு எண் கொடுத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. வீட்டு கடன் வேண்டி விண்ணப்பித்தால் வங்கி நிர்வாகம் தரப்பில் சம்பந்தப்பட்ட வீட்டு மனை அமைந்திருக்கும் இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பின்னர் கட்டிடத்தை மதிப்பீடு செய்து கடன் வழங்குவது வழக்கம். பொட்டல் காடாய் கடந்த 8 ஆண்டு காலம் காட்சி அளித்து கொண்டிருக்கும் இடத்தை ஆய்வு மேற்கொள்ளாமலே ரூ.15,00,000 / – கடன் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெகா மோசடி குறித்து க வே கள்ளிபாளையம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் செல்வம் கூறுகையில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருக்க வாயப்புள்ளதாகவும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.




