சிவராத்திரி விழாவில் பரதநாட்டியத்தில் சாதனை புரிந்த மாணவிகள் !

மகா சிவராத்திரி தினத்தன்று சென்னை கொரட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில், நிருத்திய நித்யாலயா வழங்கிய ஜம்புகேஸ்வரர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிருத்திய நித்யாலயா நிறுவனர் முனைவர் சௌமியா வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக தேவர் குரூப் ஆஃப் கம்பெனி தலைமை நிர்வாக அலுவலர் முனைவர். அ. அங்கப்பன், சிவசக்தி சினிமாஸ் நிர்வாக இயக்குனர் பாஸ்கர், திரைப்பட இயக்குநர் எம் கார்த்திகேயன், கொரட்டூர் பகுதி பிரமுகர்கள் லால், ஐயப்பன், மாமன்ற உறுப்பினர் ஜான்,கேஜிஜே மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் அசோக் குமார் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலர், தக்கார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து, நடனக் கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களுடன் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பரதநாட்டிய ஆசிரியர் திருவெற்றியூர் சாதன ராமன் மாணவி ஜி. ஜே பிரிசில்லா மேரி சிறப்பான முகபாவனையுடன் காண்போர் வியக்கும் வகையில் திறமைகளை வெளிப்படுத்தினார்.


அதனைத்தொடர்ந்து UKG மாணவி புகழினியின் நாட்டியம், கொரட்டூர் நிருத்திய நித்யாலயா குழுவினர், கொளத்தூர் ஶ்ரீ சரஸ்வதி சீனிவாசனின் மாணவி சரஸ்வதி கலா நிகேதன், திருவெற்றியூர் சுரேகா ரோஷனின் ஆதான்ய நாட்டியப் பள்ளி மாணவிகள், நொளம்பூர் ஸ்மிதா செந்தில் குரு ஶ்ரீ அகாடமியின் நாட்டியாலயஷேத்ரா குழுவினர், அண்ணாநகர் மேற்கு தீபஞ்சனா சக்ரவர்த்தி ரிதம் டிவைன் மற்றும் வெல்னஸ் கிளப் குழுவினர், கொரட்டூர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் பரதநாட்டிய திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியை சிறப்பாக செய்த நிருத்திய நித்யாலயா நிறுவனர் முனைவர் சௌமியா அவர்களை பொது மக்கள் அனைவரும் மனதார பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்




