தமிழகம்

பல்லடத்தை வட்டமிடும் கொள்ளைக் கும்பல் !.? பட்டப்பகலில் வீட்டை உடைத்து துணிச்சலாக…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி விசைத்தறி, விவசாயம், பின்னலாடை, கறிக்கோழி உற்பத்தி ஆகிய பிரதான தொழில் நகரமாக விளங்கி வருகிறது. பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட நகரப்பகுதியில் பல்லடம் , மங்கலம், அவினாசிபாளையம் மற்றும் காமநாயக்கன்பாளையத்தில் ஆய்வாளர் தலைமையில் காவல் நிலையங்களும், பல்லடத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் துணை கண்காணிப்பாளர் அலுவலகமும் அமைந்துள்ளது. மேலும் குற்றப்பிரிவிற்கு தனியாக ஆய்வாளர் தலைமையில் காவல்நிலையம் செயல்பட்டுவருகிறது.

மேலும் திருப்பூருக்கு அடுத்தபடியாக பல்லடத்தில் அதிக அளவில் தொழில்சாலைகள் அமைந்துள்ளதால் இதனை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக பல்லடத்தை குறி வைத்து தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்கள் அங்கேறிவருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

இந்நிலையில் பல்லடம் சோமசுந்தர செட்டியார் தோட்டத்தில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான அலுவலக ஷட்டரை உடைத்து அங்கிருந்த விலை உயர்ந்த இயந்திரங்கள் களவு போயிள்ளது. இதனைத்தொடர்ந்து பல்லடத்தை அடுத்த பணிக்கப்பட்டி ஜி.பி.நகரில் பட்டப்பகலில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பொதுமக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. ஜி.பி. நகரில் அருகருகே குடியிருந்து வருபவர்கள் சசிக்குமார் மற்றும் கனேசன். சசிக்குமார் மற்றும் மனைவி இருவரும் பல்லட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் இரு மகன்களும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் மதிய உணவிற்காக சசிக்குமார் வீட்டிற்கு வந்து கேட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்துகிடந்தது. மேலும் அருகில் உள்ள கணேசின் வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனையடுத்து கணேசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு. பின்னர் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்தில் மேற்கொண்ட விசாரணையில் இரு வீட்டிலிருந்தும் சுமார் 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் காமநாயக்கன்பாளையத்தில் இதே போன்று 12 சவரன் நகை கொள்ளைபோயுள்ளது. பட்டப்பகலில் பல்லடத்தை வட்டமடிக்கும் கொள்ளக்கும்பலின் கொட்டத்தை போலீசார் அடக்கி பொதுமக்களின் அச்சத்தை போக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button