தமிழகம்

சுமதின்னா பூ இல்ல..! நெருப்பு.. போதையில் பவர் காட்டும் பெண்மணி !

திருப்பூர், கோவை, தர்மபுரி என பல்வேறு மாவட்டங்களில் செல்போன் டவர் மீது ஏறி போலீசாருக்கும் தீயணைப்புத்துறைக்கும் போக்கு காட்டி வருபவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சுமதி. கடந்த இரண்டு மாதத்தில் மூன்று முறை செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பி. துரிஞ்சிப்பட்டியை சேர்த்நவர் சுமதி(42), கணவர் குணசேகரன் கட்டிட வேலை செய்துவந்த நிலையில் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ள நிலையில் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார் சுமதி. மேலும் சுப்பிரமணி என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கோபிநத்தம்பட்டிக்கு சென்ற சுமதி அங்கு சுப்பிரமணியுடன் மது போதையில் தகராறு செய்து அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்தாண்டு ஜனவரி 16 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த அக்ரஹாரம்புதூர் பகுதியில் ஜேசிபி ஓட்டிய வகையில் வரவு செலவு குறித்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து அருகில் உள்ள செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்துள்ளார். இதை விட கொடுமையாக குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் உள்ள செல்போன் டவரில் சுமதி போதையில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தனது 17 வயது தங்கை மகளை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடியும் இறங்க மறுத்துள்ளார். பின்னர் சுமதி தங்கையின் 17 வயது மகளை பணயம் வைத்து செல்போன் டவரில் ஏற்றிவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து செல்போன் டவரில் இருந்து சுமதியை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். போதையில் பெண்மணி பலமுறை போலீசாரையும், தீயணைப்புத் துறையினரையும் அலைக்கழித்ததோடு, சிறுமியை பணயமாக வைத்து உயிருடன் விளையாடி வரும் சுமதி போன்ற போதை பெண்மணி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் தான் இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும்.

சுமதின்னா பிளவர் இல்ல பயர் என கூறி ஆக்ரோசமாக திரியும் போதை பெண்மணி சுமதியை விரட்டி விரட்டி வெளுக்கத்தோனுவதாக பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button