மத்திய உளவு பிரிவுகளில் ஒன்று இன்டெலிஜன்ஸ் பீரோ. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஐபியை முறைகேடாக பயன்படுத்துவார்கள். கட்சிகளை உடைப்பது தொடங்கி,திரைப்பட நடிகர்களை ஆட்டுவிப்பது வரை அனைத்தையும் ஐபி செய்து முடிக்கும். அண்மையில் தமிழகத்தில் ரகசியமாக ஒரு கணிப்பை நடத்தியுள்ளது ஐபி.
இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கு மக்களிடையே யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதை கணித்துள்ளது. அதன்படி 25வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களிடையே விஜய்க்கு 70 விழுக்காடு ஆதரவு உள்ளதாக அந்தக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும், அது மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் விஜயின் நலத்திட்ட உதவிகள் ரசிகர்களை கடந்து பொதுமக்களும் பயன்பெற்றுள்ளனர் என்று ஐபி அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
ஐபியின் அறிக்கைக்குப் பிறகே விஜய் மீதான சோதனை தாக்குதல் நடந்துள்ளது. நடிகர் ரஜினி குறித்தும் ஐபி அறிக்கை கொடுத்துள்ளதாம். அவர் மண்குதிரை, குழப்பமான மனநிலையில் இருப்பவர், தனிமை விரும்பி என்றெல்லாம் ஐபி அறிக்கை கொடுத்துள்ளதாம். ரஜினி திரைத்துறையில் சம்பாதிக்கும் கோடிகள் அனைத்துமே அசையும், அசையா சொத்துக்களாக உள்ளன.
அவரது பணத்தால் பொதுமக்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்குக்கூட நயாபைசா பயன் இல்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும் கரைத்தார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதால் ஒரு ஆடிட்டர் மூலம் தன் முயற்சியை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. இது எந்த அளவுக்கு பயன்தரும் என்பது ரஜினிக்கும் ஆடிட்டருக்கும் மட்டுமே தெரியும்.