தமிழகம்

பல்லடம் அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! விபத்தில் இறந்ததாக நாடகமாடியது அம்பலம் !

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளி நகர் 18 வது வீதியில் குடியிருந்து வருபவர் காசியம்மாள். தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்த இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறியுள்ளார். கணவரை இழந்த காசியம்மாகுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 06 ஆம் தேதி புதன்கிழமை மதியம் தனது மகள் பொன்முடியுடன் வீட்டில் இருந்தபோது, குடிபோதையில் அங்கு வந்த மருமகன் முருகன் வீட்டில் இருந்த மனைவி மற்றும் மாமியாருடன் தகராறு செய்துள்ளார். பின்னர் மாமியாரை கட்டையால் தாக்கியதால் மண்டை உடைந்து ரத்தம் வழிந்துள்ளது.

இதனையடுத்து காசியம்மாளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், குடிபோதையில் இருந்த முருகன் விபத்தில் காயம் அடைந்ததாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதார். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரண நடத்தி வந்தனர். இதனிடையே முருகனின் மருமகன் சமீர் தனது மாமனாரை காசியம்மாளின் மகன்கள் பழனிசாமி, பாண்டி ஆகிய இருவரும் தனது தாயாரை தாக்கிய ஆத்திரத்தில் முருகனை தாக்கியதில் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து பழனிசாமி, பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொலை வழக்கை மறைத்து விபத்து நடந்ததாக கூறி நாடகாடிய இருவரையும் அதிரடியாக பல்லடம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button