மாவட்டம்
பல்லடம் அருகே ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது !

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட அய்யம்பாளையம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருபவர் கந்தசாமி. அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒப்பந்ததாரர் கதிர்வேல் என்பவருக்கு ஊராட்சி பணிகளுக்கான 23 பில்களில் 15 பில்கலுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் ஊராட்சி செயலாளர் கந்தசாமி. மீதமுள்ள 13 பில்களுக்கு ஒப்புதல் அளிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த ஒப்பந்ததாரர் கதிர்வேல் இது குறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ. 30 ஆயிரத்தை கதிர்வேல் அய்யம்பாளையம் ஊராட்சி அலுவகத்தில் ஊராட்சி செயலர் கந்தசாமியிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராமசந்திரன் தலைமையிலான போலீசார் கந்தசாமியை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்




