தமிழகம்

தனியாருக்கு தாரை வார்க்கும் டாஸ்மாக் நிர்வாகம் ?.! பணம் சம்பாதிக்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

மதுபான கடையில் காலி பாட்டில்களை சேகரிப்பது சம்பந்தமாக தமிழ்நாட்டில் மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. டாஸ்மாக் கடையில் வேலை செய்கின்றவர்கள் காளி பாட்டலுக்கு பத்து ரூபாய் திருப்பிக் கொடுப்பது சம்பந்தமாக ஏற்கனவே கடையில் ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கின்றது. இந்தச் சமயத்தில் பாட்டிலைக்கு பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு இருப்பது வேலைப்பளு அதிகமாக இருக்கின்றது. தமிழக அரசாங்கம் பார் குத்தகைக்கு விடுகின்ற பொழுது காளி பாட்டிலையும் பார் உரிமையாளரே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் நடைமுறையில் இன்று வரை இருந்து கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே தமிழக அரசாங்கம் மதுபான கடையில் இருக்கின்ற காலி அட்டை பெட்டி சேகரிப்பதற்கு தனியாக டெண்டர் விடப்பட்டுள்ளது. அதே போல் திருப்பிக் கொடுக்கின்ற பாட்டல்களுக்கும் தனியாக டெண்டர் விட்டு தனியார் மூலம் வாங்கிக் கொள்ள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான் மதுபான கடையில் வேலை செய்கின்றவர்களுடைய கோரிக்கை. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் என்று மதுபான கடை ஊழியர்கள் அறிவித்துள்ளார்கள்.

இந்தப் போராட்டத்திற்கு தூண்டுதலாக எஃப் எல் 2 பார் உரிமையாளர்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏன் என்று சொன்னால் ஒரு நாளைக்கு தனியார் எஃப் எல் 2 பாரில் சுமார் இரண்டு லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்ற நிலையில், தற்பொழுது 10 லட்ச ரூபாய்க்கும் மேல் வியாபாரம் நடைபெறுகிறது. எஃப் எல் டு பார் நடத்துபவர்கள் சங்கம் அமைத்து தலைவர், செயலாளர், பொருளாளர் என்று அமைப்பு ரீதியாக செயல்படுகின்றனர். மனமகில் மன்றத்தில் உறுப்பினராக இருக்கின்றவர்கள் தான் மது அருந்த வேண்டும் என்ற சட்டமும் உள்ளது. மொத்தம் குறைந்தபட்சம் 300 உறுப்பினர்களுக்கு மேல் இருக்க வேண்டும்.

ஆனால் தற்பொழுது ஒரு நாளைக்கு எஃப் எல் 2 பாரில் 2000, 3000 பேர் மது அருந்த வருகிறார்கள். இது சட்டத்துக்கு புறம்பானதாகும் அரசாங்கம் எஃப் எல் டு பாரில் மது  அருந்துகிறவர்கள் உறுப்பினர் தானா என்று ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். எஃப் எல் 2 பார் சம்பந்தப்பட்டவர்கள் மதுபான கடைகளுக்கு ஆட்களை அனுப்பி தகராறு செய்வதாகவும் கூறப்படுகிறது. அப்படி தகராறு செய்தால் அரசால் நடத்தப்படும் மதுபான கடைகள் நிறுத்தப்படலாம் என்பதற்காக, அவர்கள் அப்படி செய்வதாக பொதுமக்கள் சார்பில் கூறப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் அரசு மதுபான கடைகள் இயங்காமல் இருப்பது எஃப் எல் 2 பார் உரிமையாளர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் சம்பந்தப்பட்ட அமைச்சர் இதனை கருத்தில் கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button