தமிழகம்

பங்குகளை பறிகொடுத்த சரத்…! எழுதி வாங்கிய ஆளும் தரப்பு.!

ஆளும் தரப்பின் தொலைக்காட்சி நிறுவனம் துவங்கப்பட்ட போது அப்போதைய திமுக தலைவர் கலைஞர், தொலைக்காட்சியின் உரிமையை முக அழகிரி, முக ஸ்டாலின், முக தமிழரசு, கனிமொழி, தயாளு அம்மாள், தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத் ஆகிய ஆறு பேருக்கு பங்குகளை பிரித்துக் கொடுத்திருந்தார்.

சரத் ஏற்கனவே சூரியன் தொலைக்காட்சியில் முக்கியமான பொறுப்பில் இருந்தவர். அப்போது 2G வழக்கு விஸ்வரூபம் எடுத்தபோது இவரையும் அந்த வழக்கில் முக்கிய நபராகச் சேர்த்து விசாரணை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொலைக்காட்சி நிறுவனம் தொடங்க மூளையாக செயல்பட்டவரும் இந்த சரத் தான் என்பதும் அனைவரும் அறிந்ததே.

சமீப காலமாக தொலைக்காட்சி விவகாரங்கள் எதிலும் சரத் தலையிடாமல் இருந்து வந்தார். இதுசம்பந்தமாக விசாரித்தபோது ஆளும் தரப்பின் மருமகன் பரிந்துரையின் பேரில் கார்த்திக் என்பவர் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளாராம். இவர் நிர்வாகியாக வந்தபிறகு தொலைக்காட்சி நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டி வருகிறாராம். இவர் என்ன செய்வார் மருமகனின் மூளையாகத்தானே இவர் செயல்படுகிறார் என்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 13.12.2022 அன்று முதலமைச்சர் அலுவலகத்திற்கு சரத் வரவழைக்கப்பட்டு, அவரிடமிருந்த தொலைக்காட்சியின் பங்குகளை எழுதி வாங்கியதாகவும், அதற்குப் பதிலாக பீர் பேக்டரி ஒன்றை அவருக்கு வழங்கியதாகவும் தெரியவருகிறது. இப்போது தொலைக்காட்சியின் பங்குகளை வைத்திருந்த வெளிநபரான சரத் வெளியேற்றப்பட்டதால் மொத்த பங்குகளும் ஆளும் தரப்பின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே சொந்தமாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button