டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் அபாரதம்: கலெக்டர் எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் அபாரதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கலெக்டர் தலைமையில் மருத்தவத் துறை வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், மகளிர் திட்டம், பள்ளிக் கல்வித் துறை உள்பட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து 4 கண்காணிப்பு அலுவலர்கள், 18 மண்டல அலுவலர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை ஒழிக்கும் பணிகள் மிகப் பெரிய அளவில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்தால், இட உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.அபாரதம் விதிக்கப்பட்ட இடங்களில் 3 தடவைக்கு மேல் கொசுப்புழு கண்டறியப்பட்டால் வழக்கு பதியப்படும். வருகின்ற 24ந்தேதி (புதன்கிழமை)முதல் அபராதம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.