அரசுக்கு எதிராக அரசுத்துறை அதிகாரி – பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து?
கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் கொரானா கட்டுப்பாடுகளை கேலிக்கூத்தாகும் விதமாக அரசு அதிகாரியே அரசுக்கு எதிராக செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஜனவரி7 மற்றும் 8 ஆம் தேதிகளில் ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள தனியார் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் கராத்தே தியாகராஜன் தலைமையிலான கராத்தே அமைப்பு மாநில அளவிலான கராத்தே போட்டிகளை சுமார் 1500 பள்ளி மாணவர்களை கொண்டு நடத்தியுள்ளனர்.
தமிழக அரசு கொரானா கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில் குழந்தைகளின் உயிரை பணயம் வைத்து இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இதன் பின்னனில் ஒரு அரசு அதிகாரி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் கராத்தே விளையாட்டில் முறைகேடுகள் நடைபெறுவதால் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இந்நிலையில் அங்கீகாரமில்லாத கராத்தே விளையாட்டு போட்டிகளை கராத்தே தியாகராஜன் தலைமையிலான கராத்தே அமைப்பு ஈரோட்டில் இரண்டு நாட்கள் நடத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கராத்தே போட்டிகளில் 1500 மாணவர்கள் கலந்துகொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. கொரானா தொற்று மாணவர்களை பாதிக்காதவண்ணம் பள்ளிகளை மூடி கண்ணில் இமை காப்பது போல் பள்ளி குழந்தைகளை தமிழக அரசு காத்து வருகிறது.
இந்நிலையில் இது போன்று 1500 போட்டியாளர்களுடன் உள் விளையாட்டு அரங்கில் போட்டிகளை நடத்த அனுமதி அளித்தது யார்? போட்டியாளர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? பயிற்சியாளர்கள் நடுவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? முழுமையாக நடுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனரா? பள்ளிகளுக்கு மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டுருக்கும் வேளையில் இது போன்ற போட்டிகளுக்கு பள்ளி நிர்வாகம் எவ்வாறு அனுமதி அளித்தது? மேலும் மாநில அளவிலான போட்டிகளை இக்கட்டான கால கட்டத்தில் அவசர கோலத்தில் நடத்துவது முறையா? என்பன போன்ற கேள்விகளுக்கு இன்று வரை விடை தெரியவில்லை.
மேலும் சமீப காலங்களில் தமிழக அரசுக்கு எதிராக கராத்தே விளையாட்டை கராத்தே தியாகரஜன் தலைமையிலான அமைப்பு தூண்டிவிடுகிறதா என கேள்வி எழும்புகிறது. மாநில கராத்தே சங்கம் தனியார் கராத்தே அமைப்பு என பல பெயர்களில் கராத்தே தியாகராஜன் தலைமையிலான அமைப்புகள் தமிழக அரசின் கொரானா கட்டுப்பாடுகளை மீறி பள்ளி குழந்தைகளின் உயிரை பணயம் வைத்து இது போன்று கராத்தே போட்டிகளை நடத்தி அரசுக்கு கெட்டபெயரை உருவாக்க முயற்சிக்கின்றனரா? என கேள்வி எழுகிறது? மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பணி இக்கட்டான சூழ்நிலையில் மிக முக்கியமாக கருதப்படும் நிலையில் அரசு அதிகாரி முத்துராஜ் அங்கீகாரமற்ற கராத்தே விளையாட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்வதும் இது போன்று அரசுக்கெதிராக கராத்தே தியாகராஜன் தலைமையில் செயல்படுவதை மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறதா? கொரானா காலத்தில் இது போன்று போட்டிகளை நடத்துவது குறித்து கேள்வி கேட்ட கராத்தே ஆசிரியர்களுக்கு பதில் மிரட்டல் மட்டும் தான்.
9 ஆம் தேதி முழு ஊரடங்கை கடைபிடிக்கும் தமிழக அரசு இது போன்று போட்டிகளை நடத்துவர்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கராத்தே ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழக அரசிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு அதிகாரி முத்துராஜ் ஒன்றிய கட்சி நிர்வாகி தலைமையில் பள்ளி குழந்தைகளின் உயிரை பணயம் வைத்து அரசுக்கெதிராக செயல்படுவதை நிறுத்திவிட்டு வட்டார அளவிலான பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையகும்.