விமர்சனம்

புதுமையான த்ரில்லர் கதையில்.. மிரட்டும் “மிரள்” திரைவிமர்சனம்

அக்சஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில், சக்திவேல் இயக்கத்தில் பரத், வாணி போஜன் நடிப்பில் வெளியாகி தியேட்டர்களில் ஜனங்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள படம் “மிரள்”.

கதைப்படி… பரத், வாணி போஜன் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். வாணி போஜன் காதலை அவரது தந்தை ஏற்றுக்கொள்ள வில்லை. இந்நிலையில் வாணி போஜன்.. அவரது கனவனை முகமூடி அணிந்த சிலர் கொலை செய்துவிட்டு அவரையும் கொலை செய்ய முயல்வதாக கனவு காண்கிறார். இதை அவரது கனவரிடம் சொல்லி பயப்படுகிறார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு சோர்வடைகிறார்.

இதன்பிறகு கட்டிடப் பொறியியாளராக பரத் வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் பரத் உயிர் பிழைக்க, அவரது கார் சேதமாகிறது. பின்னர் இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட குல தெய்வத்திற்கு படையலிட்டு வழிபட்டால் சரியாகிவிடும் என முடிவெடுத்து சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.

கிராமத்தில் குல தெய்வ வழிபாடு பூஜைகள் நிறைவடைந்ததும் தம்பதியர் இருவரும் சந்தோஷமாக இருப்பதாக உணரும் போது, பரத் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை சம்பந்தமாக அழைப்பு வருகிறது. இதனால் மேலும் சந்தோஷமடைந்து இரவு நேரத்திலேயே ஊருக்கு கிளம்புகின்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். அதிலிருந்து பரத், வாணி போஜன் தம்பதி தன் மகனுடன் உயர் பிழைத்தார்களா ? வாணி போஜன் கனவில் தோன்றிய சம்பவங்கள் நடந்தேறியதா ? என்பது மீதிக்கதை…..

படம் ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு எதிர்பாராத பல திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து மிரள வைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button