அஜித்தின் “விடாமுயற்சி” விஷ்வரூப வெற்றியா ?.! திரைவிமர்சனம்

லைகா நிறுவனம் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரோ, ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “விடாமுயற்சி”.
கதைப்படி.. அஜர்பைஜானில் வசித்துவரும் அர்ஜுன், கயல் ( அஜித், த்ரிஷா ) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். பன்னிரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கயல் அர்ஜுனை பிரிய நினைக்கிறார். இந்நிலையில் கயலின் அம்மா வீட்டிற்கு பாலைவன சாலையில் இருவரும் காரில் செல்கின்றனர். அப்போது ஒரு பெட்ரோல் பங்கில் உள்ள கடையில், தமிழர்களான ரக்க்ஷித், தீபிகா ( அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரோ ) இருவரையும் கயல் சந்திக்கிறார்.

பின்னர் அர்ஜுனின் கார் ரிப்பேர் ஆக, பின்னால் வந்த ரக்ஷித், தீபிகா வந்த ட்ரக்கில் கயலை அனுப்பி நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹோட்டலில் இறக்கிவிடுமாறு அனுப்பி வைக்கிறார் அர்ஜூன். அர்ஜுன் காரை சரிசெய்து ஹோட்டலுக்கு சென்று பார்த்தபோது கயல் இல்லாததை உணர்ந்து அங்குமிங்கும் தேடி அழைக்கிறார். பின்னர் கயல் கடத்தப்படதாக தெரியவருகிறது.
கயலை யார் எதற்காக கடத்தினார்கள் ? அர்ஜுன் கயலை மிட்டாரா ? கயல் என்ன ஆனார் ? என்பது மீதிக்கதை..

அஜித் தனது வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்ட கோணத்தில், வித்தியாசமான கதை களத்தில் சமூக சிந்தனையிடன் இந்த கதையை தேர்வுசெய்து நடித்திருக்கிறார். அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும், சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்தி, சிந்திக்க வைக்கிறது விடாமுயற்சி.
த்ரிஷா வயதானாலும் அவரது அழகும், ஸ்டைலான நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. அதேபோல் அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரோ இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.