விமர்சனம்

கோவிலைக் காட்டி மக்களை ஏமாற்றி வாழலாம் !.? “வடக்குப்பட்டிராமசாமி” விமர்சனம்

பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனத்தின் சார்பில் விஸ்வபிரசாத் தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில், சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி,எம்.எஸ் பாஸ்கர், மாறன், தமிழ், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ரவி மரியா, ஜேசு, சுரேஷ், பிரசாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வடக்குப்பட்டி ராமசாமி”.

கதைப்படி… வட தமிழகத்தில் வடக்குப்பட்டி என்கிற கிராமத்தில் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்குச் செல்லாமல், பானை செய்து விற்பனை செய்யும் தொழிலைச் செய்கிறார் ராமசாமி ( சந்தானம் ). வறுமையின் காரணமாக கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தது வருகிறார். அந்த ஊரில் பௌர்ணமி அன்று காட்டேரி உலாவரும் சமயம், ஒருவன் தன்னிடம் உள்ள நகைகளை மறைத்து வைப்பதற்காக ராமசாமி வீட்டிலிருந்து பானையை திருடி செல்கிறான். அவனை விரட்டி ராமசாமி துரத்திச் செல்கையில், எதிரே காட்டேரியை தீப்பந்தத்துடன் ஊர் மக்கள் துரத்தி வருகின்றனர். அப்போது காட்டேரி வந்த வண்டி ராமசாமியின் அருகில் இருந்த கல்லில் மோதி கீழே விழ, ராமசாமி அருகில் புதைக்கப்பட்ட பானை உடைந்து நகைகள் மின்னுகிறது.

ஊர் மக்கள் தங்களின் தெய்வம் கண்ணாத்தாள் காட்சி தருவதாக அந்த பானையை வழிபட, ஊர் மக்களின் நம்பிக்கையை மூலதனமாக்கி அந்த பாவனையை வைத்து கோவில் கட்டி பணம் சம்பாதிக்கிறார் ராமசாமி. பின்னர் ஊர் மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதால் பணம், நகை, நிலம் என வருமானம் அதிகரிக்கிறது. ஒருநாள் கோவிலுக்கு வந்த தாசில்தார் அங்குள்ள வருமானத்தைப் பார்த்து கோவில் நிலங்களை குத்தகைக்கு விட்டு, பணம் சம்பாதிக்க நினைத்து ராமசாமியிடம் பேரம் பேசுகிறார். ராமசாமி சம்மதிக்காததால் ஊரில் கலவரத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருப்பதாகச் சொல்லி, ஊர் மக்களின் எதிர்ப்பை மீறி கோவிலுக்குச் சீல் வைக்கிறார் தாசில்தார்.

அதன்பிறகு ஊரில் அமைதி ஏற்பட்டு கோவில் திறக்கப்பட்டதா ? கோவில் நிலங்களை அரசாங்கம் குத்தகைக்கு விட்டதா ? தாசில்தாரின் எதிர்ப்பை ராமசாமி எவ்வாறு கையாண்டார் என்பது மீதிக்கதை…

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் சந்தானத்தின் முழுநேர காமெடி காட்சிகள், படம் பார்ப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தான் மட்டும் ஸ்கோர் செய்யாமல் சக நடிகர்களான ஷேசு, மாறன் இருவருக்கும் சமமான வாய்ப்புகளை கொடுத்துள்ளார் சந்தானம். இவர்களோடு நிழல்கள் ரவியும் காமெடி காட்சிகள் கலக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

ரவி மரியா, ஜான் விஜய் இருவரும் தோன்றும் காட்சிகள், பேசும் வசனங்கள் சிரிப்புக்கு குறையில்லை என்றே சொல்லலாம். இருவரையும் இயக்குநர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். மேகா ஆகாஷ் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒரு ஊரில் கோவிலைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து, நகைச்சுவையுடன் திரைக்கதை அமைத்து அனைவரையும் சிரிக்க வைத்த இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button