மது போதையில் ஆம்லேட் கேட்டு தகராறு செய்த திமுக நிர்வாகி ! வைரலாகும் வீடியோவால் மௌனமான திமுகவினர் !

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஏரிப்பாளையம் பகுதியில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்று வந்த உடுமலை நகர இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரிடம் ஆம்லேட் ஆர்டர் செய்துள்ளனர். ஆம்லேட் கொண்டு வர தாமதம் ஏற்பட்டதால், அப்போது கோபமடைந்து, சம்பந்தப்பட்ட கடை ஊழியரை தாக்கியுள்ளனர்.

ஆரம்பத்திலிருந்தே கடையின் உரிமையாளர் திமுக நிர்வாகி மற்றும் அவரது நண்பர்களை எவ்வளவோ சமாதானம் செய்தும், அதனை ஏற்றுக்கொள்ளாத அந்த நபர்கள், கடையில் உள்ள நாற்காலிகளை அடித்து நொறுக்கி பொருட்களை சேதப்படுத்தி, ஊழியர்களை சரமாறியாக தாக்கியதால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உணவகத்திற்கு சாப்பிட வந்த திமுக நிர்வாகியும், அவரது நண்பர்களும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகள் மீது பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான வேலையை மும்முரமாக செய்து வரும் நிலையில், கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இளைஞரணி துணை அமைப்பாளர் செய்த பிரச்சனையால் உடுமலை திமுகவினர் வேதனை அடைந்துள்ளனர்.