சினிமாமாவட்டம்

“தக் லைஃப்” தமிழ் பெயரா ? கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள் !

நடிகர் கமலஹாசன் நடிப்பில் தற்போது “தக் லைஃப்” திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், பல்லடத்தில் சமூக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கமலஹாசனுக்கு கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றி கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் தமிழ் குறித்து பேசிய கமலஹாசன் தனது படத்தின் பெயரை தமிழ் வைக்காதது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளனர்.

மேலும் சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.. கடந்த மே 24ஆம் தேதி சென்னையில் நடந்த “தக் லைஃப்” திரைப்பட வெளியீட்டு விழாவில் தாங்கள் பேசிய கருத்தால் கர்நாடகா முழுவதும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். அம்மாநில முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

இந்நிலையில் தங்களது திரைப்படத்தின் விழாவில் “தக் லைஃப்” என்றால் என்ன அர்த்தம், அது என்ன மொழி என்பதை பற்றி எந்த கருத்தும் சொல்லவில்லை. அதற்கான விளக்கத்தையும், தமிழில் பெயர் வைக்காததற்கான காரணங்களையும் மக்கள் மத்தியில் தெரியப்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button