விமர்சனம்

பாலியல் குற்றவாளி மர்ம மரணம் ! மறைந்திருந்து பலி வாங்கியதா பெண்கள் தற்காப்பு படை !.? “ஆட்டி” படத்தின் விமர்சனம்

லெட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து, நடித்துள்ள படம் “ஆட்டி”, மேலும் அபி நட்சத்திரா, காதல் சுகுமார், சௌந்தர், செல்வக்குமார், பிரவின் பழனிச்சாமி உள்ளிட்டோர் நடிப்பில், கிட்டு இயக்கத்தில் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வெளியாகியுள்ளது.

கதைப்படி.. மலைப் பிரதேசத்தில் டீ எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் வசிக்கும் கிராமம். அங்கு ஒரு காவல் நிலையமும், போஸ்ட் ஆஃபீஸூம் இருக்கிறது. 1970 காலகட்டத்தில் படிப்பறிவு இல்லாத தொழிலாளர்கள் மத்தியில் அழகு ( அபி நட்சத்திரா ) என்கிற பெண் மட்டும் நன்கு படித்தவர். வருங்கால சந்ததியினர் படிப்பறிவு பெற வேண்டும் என்பதற்காக ஒரு பாடசாலையை உருவாக்கி நிர்வகித்து வருகிறார். படிக்க விருப்பமில்லாத குழந்தைகளையும் விடாப்பிடியாக இழுத்துவந்து பாடம் நடத்துகிறார். அவ்வப்போது தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பாடம் நடத்த ஆசிரியர்கள் வருவதுண்டு. அத்துவான காட்டுப்பகுதி என்பதால் யாரும் நீண்டநாள் தங்குவதில்லை.

இதற்கிடையில் காவல் நிலையத்திற்கு, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அமைதிராஜ் ( இசக்கி கார்வண்ணன் ) இன்ஸ்பெக்டர் வருகிறார். காவல் நிலையத்திற்கான பரபரப்பு ஏதுமின்றி, இரண்டு காவலர்கள் மட்டுமே இருக்கின்றனர். விசாரிக்கையில் எந்தவித வழக்குகளும் வருவதில்லை என்கிறார்கள். ஏன் என்கிற கோணத்தில் அப்பகுதிகளில் சுற்றி வருகிறார்.

இதற்கிடையில் செல்வம் என்கிற ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்க கிராமத்திற்கு வருகிறார். ஊரே அவரை மேள தாளங்கள் முழங்க வரவேற்று கொண்டாடுகின்றனர். ஆனால் சில நாட்களிலேயே மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். போஸ்ட் மாஸ்டர் சௌந்தர் காவல்நிலையத்தில் புகார் செய்கிறார்.

ஆசிரியரை யார், எதற்காக மர்மமான முறையில் கொலை செய்தார்கள் ? மலைக்கிராமத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்ன ? என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அமைதிராஜ் சந்திக்கும் சவால்கள் என்ன என்பது மீதிக்கதை.‌..

மலைக்கிராம மக்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, அவர்களின் அசாத்திய திறமை உள்ளிட்டவற்றை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளை தண்டிக்க தற்காப்பு படைகள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் மக்களோடு மக்களாக இருப்பார்கள் என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தில் இசக்கி கார்வண்ணன், சவாலான அழகு கதாப்பாத்திரத்தில் அபி நட்சத்திரா, போஸ்ட் மாஸ்டர் கதாப்பாத்திரத்தில் சௌந்தர் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button