அத்தியாவசிய பிரச்சினையில் அலட்சியம் காட்டும் மேயர் ! தொற்றுநோய் அபாயத்தில் பொதுமக்கள் !

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறையிலிருந்து கழிவுநீர் வெளியேறி, பேருந்து நிலையத்தை சூழ்ந்துள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதோடு, துர்நாற்றம் வீசி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாநகருக்குள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய முக்கிய இடமாக பழைய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. பேருந்துகளை பயன்படுத்தும் மக்கள், பேருந்து நிலையத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு கழிவுநீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் ஏற்படும் அபாயத்தில், பொதுமக்கள் அச்சத்துடனேயே முத்தத்தை மூடிக்கொண்டு கழிவுநீரை கடந்து செல்கின்றனர்.

இதுசம்பந்தமாக மாநகராட்சி மேயர், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்சினையில், அலட்சியம் காட்டாமல் உடனடியாக தீர்க்க வேண்டும். தீர்க்கப்படுமா ? காத்திருப்போம்…