திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் தாமதம், பணியாளர்களை நியமிக்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரியில் புதிதாக 500 படுக்கைகள் பயன்பாட்டு சேவையை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணி ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் துவக்கி வைத்தனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு போதுமான வசதிகள் இல்லை எனவும் அவசர சிகிச்சை பிரிவில் ஆண் செவிலியர் உதவியாளர்களை பணிக்கு நியமனம் செய்யாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் உடனடியாக கூடுதலாக பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.
மேலும் தலைமை செவிலியர் அறைக்கு முன்பு டீ கப் , பேப்பர் என குப்பைகளால் சுகாதாரம் இல்லாமல் இருப்பதை உடனடியாக சுத்தம் செய்யக் கோரி தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
செய்தியாளர்
கா. சாதிக்பாட்ஷா