தூத்துக்குடி அருகே “வாழ வைக்கும் வாழை விவசாயம்” புத்தாக்க பயிற்சி ! பயனடைந்த பெண்கள் மகிழ்ச்சி !
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், மாரமங்கலம் ஊராட்சியில் வாழை தொகுப்பிற்கான ஒரு நாள் தொழில்நுட்ப புத்தாக்க பயிற்சி, ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பின் கணக்காளர் மூ. ஆனந்தவல்லி, அனுப்பிரியா ஆகியோர் ஏற்பாட்டில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் மகளிர் திட்டத்தின் மூலம் நடைபெற்றது.
பயிற்சியில் வாழை விவசாயத்திற்கான மண் பரிசோதனை, மண்ணுக்கேற்ற வாழை விவசாயம், சொட்டுநீர் பாசனம், நோய் தடுப்புமுறைகள், இயற்கை உரவகைகள், மதிப்பு கூட்டல், ஏற்றுமதி ஆகிய தலைப்புகளில் “வாழ வைக்கும் வாழை விவசாயம்” பொன் மொழிகளில் காணொலி மூலமாக தெளிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. சுமார் 50க்கும் மேற்பட்ட பெண் உறுப்பினர்கள் இந்த பயிற்சியில் பங்குபெற்று பயனடைந்துள்ளனர்.
இப்பயிற்சியானது கிருஷ்ணகுமார் உதவி திட்ட அலுவலர் (LH) தலைமையில் நடைப்பெற்றது. மேலும், மாவட்ட சமுதாய வள பயிற்றுநர் சந்திரலேகா (DRP), வட்டார மேலாளர் சி. பத்திரகாளி, பயிற்சியாளர்கள் திருச்சிராபள்ளி வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் குமார், ஜெயபாஸ்கரன் மற்றும் ADH செல்வபிரபு, AAO V. அருணாச்சலம், மாரமங்கலம் VAO சுப்பிரமணியன், மாரமங்கலம் அரசு துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர்(LH) M. பேச்சிக்கனி, வாழை தொகுப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், PLF பணியாளர்கள் அனைவரும் பயிற்சியில் கலந்துகொண்டனர்.