“ரெபெல்” திரைவிமர்சனம்
ஸ்டூடியோ ஸ்கிரீன் ஃப்லிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிப்பில், நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ், மமிதா பைஜூ, கருணாஸ், கல்லூரி விணோத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “ரெபெல்”.
கதைப்படி.. மூணாறு பகுதியில் தோட்டத் தொழிலாளர்களாக வேலை பார்க்கும் தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக அடக்குமுறைக்கு உட்பட்டு அடிமைகளாக பணிபுரிந்து வருகிறார்கள். தாங்கள் படும் துயரங்கள் தங்களோடு போகட்டும், தங்களது குழந்தைகளாவது படித்து வேலைக்கு போய் சந்தோசமாக இருக்கட்டும் என குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். அந்த வகையில் கதிர் ( ஜீவி பிரகாஷ் ), செல்வராஜ் ( ஆதித்யா பாஸ்கர் ), பாண்டி ( வினோத் ) உள்ளிட்ட அப்பகுதி மாணவர்கள் பாலக்காட்டில் உள்ள அரசு கல்லூரியில் சேர்கின்றனர்.
அந்த கல்லூரியில் மாணவர் சங்கத்தின் தலைவராக இருக்கும் ஆண்டனி ஒரு அணியாகவும், சார்லி தலைமையில் ஒரு அணியினரும் இரு குழுக்களாக தமிழ்நாட்டில் இருந்து படிக்க வந்துள்ள மாணவர்களை ரேக்கிங் என்கிற பெயரில் கேவலமான முறையில் நடத்தியும், கொடுரமாக தாக்குதல் நடத்தியும் அடக்குமுறையில் ஈடுபட்டு சந்தோஷப்படுகின்றனர்.
மலையாள மாணவர்களின் அடக்குமுறைக்கு அடிபணிந்து, குடும்ப சூழ்நிலை கருதி தமிழ் மாணவர்கள் தங்களது படிப்பை தொடர்ந்தார்களா ? வேறு எதாவது முடிவெடுத்தார்களா என்பது மீதிக்கதை..
படத்தின் முதல் பாதியில் ஆண்டனியாக நடித்துள்ள வெங்கடேஷ் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி, ஜீவி பிரகாஷ் ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளார். பின்னர் அடக்குமுறையிலிருந்து வெளியே வருவதற்காக தமிழ் மாணவர்கள் கல்லூரியில் நடைபெறும் தேர்தலைப் பயன்படுத்தி வகுக்கும் வியூகங்கள் படம் விருவிருப்பாக நகர்கிறது. இருவேறு பரிமாணங்களில் ஜீவி பிரகாஷ் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவணம் செலுத்தி இருக்கலாம். ஜீவி பிரகாஷின் தந்தையாக நடித்துள்ள சுப்ரமணிய சிவா, தோட்டத் தொழிலாளர், கம்யூனிச சிந்தாந்தவாதியாக கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.