“முகுந்தன் உண்ணி அசோசியேட்” திரைவிமர்சனம்
வினித் சீனிவாசன், சுராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாளப்படம் “முகுந்தன் உண்ணி அசோசியேட்”. அபினவ் சுந்தர் நாயர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். வினித் வழக்கறிஞராக நடித்துள்ளார். வினித் சீனியர் வழக்கறிஞரிடம் உதவியாளராக பணிபுரிகிறார். இந்நிலையில் இவருக்கு எந்த வழக்கையும் கொடுக்காமல் சீனியரால் வெளியேற்றப்படுகிறார் வினித்.
எந்த வழக்கும் கிடைக்காத சமயத்தில் எதிர்பாராத விதமாக அவரது அம்மாவுக்கு ஒரு விபத்து நேரிடுகிறது. அந்த சமயத்தில் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் போது, நடைபெறும் சம்பவங்களை வைத்து புதிய வாழ்கையை தொடங்க ஒரு முடிவெடுக்கிறார்.
சிறந்த வழக்கறிஞராக பெயரும், புகழும் பெற வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவரது பேராசையாலும், அவரது சுபாவத்தாலும் அவருக்கு வரும் சிக்கல்கள் என்ன? அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை…..
இன்றைய சூழ்நிலையில் நீதிமன்றங்களில் பெரும்பாலான வழக்கறிஞர்கள் விபத்து சம்மந்தமான வழக்குகளில், காப்பீட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு செய்யும் அட்டூழியங்களை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் அபினவ் சுந்தர் நாயர்.