தமிழகம்

திருப்பூர் டிடிசிபி- யில் காத்திருப்போர் பட்டியலில் பொதுமக்கள் : இயக்குநர் இல்லாமல் இயக்கத்தை மறந்த நகர் ஊரமைப்பு துறை

திருப்பூரில் வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள அரசு கட்டிடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது.

மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றான இருக்க இருப்பிடமான வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்தவும், கட்டிடங்களுக்கு அனுமதி வேண்டி இந்த அலுவலகத்திற்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் முன்பு பணியாற்றி வந்த இயக்குநர் ரமேஷ் குமார் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்ற நிலையில் ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் தியாகராஜனுக்கு திருப்பூர் மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் நகர் ஊரமைப்பு அலுவலக பணிகள் அனைத்தும் இயக்குநர் கண்காணிப்பில் நடைபெறுவது வழக்கம். திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் கட்டிட அனுமதி மற்றும் மனை வரன்முறைகளுக்காக அதிக அளவில் விண்ணப்பிக்க பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். ஆனால் இரண்டு மாவட்டத்திற்கு ஒரே துணை இயக்குநர் இருப்பதால் பெரும்பாலும் பணிகள் மந்தமாகவே நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பொதுமக்கள் தங்களது கோப்புக்கள் குறித்து விளக்கம் கேட்கவேண்டுமானாலும் துணை இயக்குநரைத்தான் சந்திக்க வேண்டும். காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு முதலில் வரும் பொதுமக்கள் இயக்குநர் வருவாரா? வரமாட்டாரா? என்று கூட தெரியாமல் மாலை வரை காத்திருந்து காத்திருந்து காட்சியில் பொதுமக்கள் காதிருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே திருப்பூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்கு நிரந்தரமாக துணை இயக்குநரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் எனவும், காலதாமதமின்றி கோப்புக்களை முடித்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button