தமிழகம்

ஆபாச தளமாகிறதா திருமண தகவல் மையம் : பல்லடத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்…

பல்லடத்தில் மேட்ரிமோனியல் இணைய தளத்தில் ஆபாச வீடியோவை பதிவிட்டு இளைஞர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குடியிருந்துகொண்டு பனியன் கம்பெனியில் வேலை பார்த்துவரும் இளைஞருக்கு கடந்த மூன்று மாதங்களாக திருமணத்திற்காக பெண் தேடும் படலத்தில் பெற்றோர்கள் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் திருமண தகவல் இணைய தளம் மூலமாக பெண்பார்த்து கொடுக்கப்படும் என கவர்ச்சி விளம்பரத்தை கண்ட பெற்றோர் ரூபாய் 1,500 செலுத்தினர். பின்னிட்டு பெண்ணின் புகைப்படங்களை இணையத்தின் மூலம் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளைஞரின் செல்போனிற்கு அழகான பெண்ணின் புகைப்படம் வந்ததை அடுத்து அதில் இருந்த வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொண்டுள்ளார். எதிர்முனையில் செல்போனில் தோன்றிய பெண் திடீரென ஆடைகளை களைந்து ஆபாசமாக நடந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத இளைஞர் உறைந்துபோய் நின்றுள்ளார். பின்னர் செல்போனின் இணைப்பை துண்டித்துள்ளார். அப்போது புதிய செல்போன் எண்ணில் இருந்து வீடியோ ஒன்று வாட்சாப்பில் வந்துள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து பார்த்தபோது இளைஞரை சித்தரித்து ஆபாச வீடியோ இருந்தது.

மேலும் வீடியோவை இளைஞரின் சில பேஸ்புக் நண்பர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வந்திருந்தது. இதனை கண்ட இளைஞர் உறைந்து போய் நின்ற நிலையில் வாட்சாப்பில் வீடியோவை சமூக வலைதளங்களில் வைராலாக்கி விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் பணம் கேட்டு மிரட்டல் துவங்கியுள்ளது. இதனை அடுத்து சுதாகரித்துகொண்ட இளைஞர் இது குறித்து பெற்றோர்களிடம் கூறினார். பின்னர் பேஸ்புக் அக்கவுண்ட்டை முடக்கியதை அடுத்து மிரட்டல் வருவது தடைபட்டது.

இது குறித்து பெற்றோர்கள் கூறும் போது, தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க தங்களது மதம் சார்ந்த திருமண தகவல் மையத்தை நம்பி பணம் கட்டி நம்பிக்கையாக இருந்தபோது இது போன்று ஆபாச வீடியோக்களை காட்டி தங்களது குடும்பதாரை பணம் கேட்டு மிரட்டி வருவதாக வேதனை தெரிவித்தனர்.

திருமண ஆசையில் கனவுகளோடு ஏங்கி கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button