இணையத் தொடர்விமர்சனம்

ஜனநாயகத்தின் சாபக்கேடு ஊழல் ! பாசிசத்தை திணிக்க நினைக்கும் ஒன்றிய… ! ராதிகா தயாரித்த “தலைமைச் செயலகம்”

ராடான் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ராதிகா சரத்குமார், சரத்குமார் தயாரிப்பில், கிஷோர்,ஸ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், தர்ஷா, சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்டோர் நடிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் ஜீ-5 ல் வெளிவந்துள்ள தொடர் “தலைமைச் செயலகம்”.

கதைப்படி.. 17 ஆண்டுகளுக்கு முன் தமிழக முதலமைச்சராக இருக்கும் அருணாசலம் ( கிஷோர் ) செய்த ஊழலுக்கு தண்டனை பெற்றே ஆகவேண்டும் என ஆதாரங்களுடன் வழக்கு கொடுக்கிறார் கிருஷ்ணமூர்த்தி ( ஷாஜி சென் ). தலைவனோ தலைவியோ மக்கள் மீது வைத்திருக்கும் காதல்தான் நீதி என்பதற்கிணங்க, எப்பவோ செய்த தவறுக்காக மனம் வருந்தி, தனது அரசாங்கத்தை பாதுகாக்கவும், எதிரிகளை வீழ்த்தவும் தனது நம்பிக்கைக்குரிய நபர்களை அழைத்து விவாதிக்கிறார் முதல்வர் அருணாசலம்.

அமைச்சரவையில் முக்கிய அமைச்சரும் தனது மகளுமான அமுதவல்லி ( ரம்யா நம்பீசன் ) தனது தந்தை சிறைக்குச் சென்றால் தான் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என காய் நகர்த்துகிறார். முதலமைச்சரின் ஆலோசகரும், நம்பிக்கைக்குரியவருமான கொற்றவை ( ஸ்ரேயா ரெட்டி ) மாநில கட்சித் தலைவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து, ஜனநாயகத்தை ஒழித்து பாசிசத்தை திணிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளின் சதித்திட்டங்களை தடுக்க நினைக்கிறார். முதல்வரின் மருமகனும் எம்.எல்.ஏவுமான ஹரிஹரன் ( நிரூப் நந்தகுமார் ) பல வேலைகளை செய்து தருவதாக கூறி ஊதாரித்தனமாக திரிந்து கொண்டு, முதல்வராக வேண்டும் என காய் நகர்த்துகிறார். மேலும் மக்களிடம் செல்வாக்கு மிக்க நபரான கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வரின் விசுவாசியுமான செல்வ புவியரசன் ) ஆகியோர் விவாதிக்கின்றனர்.

இதற்கிடையில் வடமாநிலங்களில் பல்வேறு கொலைகளை செய்துவிட்டு, கொள்ளையடித்துச் சென்ற நக்சலைட் தலைவி துர்கா வழக்கை மறுவிசாரணை செய்ய சிபிஐ அதிகாரி நவாஸ் கானை ( ஆதித்யா மேனன் ) நியமிக்கிறது நீதிமன்றம். தமிழகத்தில் போலீஸ் அதிகாரியின் கொலை வழக்கை விசாரித்து வருகிறார் மணிகண்டன் ( பரத் ). அப்போது கிடைத்த தகவல்கள் முதல்வரின் ஆலோசகர் கொற்றவைக்கும், மேற்கு வங்கத்தைச்சேர்ந்த கடத்தல்காரரும், கிளர்சியாளருமான துர்கா என்பவருக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக கண்டுபிடித்து, அது சம்பந்தமான விசாரணைக்கு டெல்லி செல்கிறார். அங்கு சிபிஐ அதிகாரி, பரத் இருவரும் துர்கா என்பவரின் விபரத்தை கண்டுபிடித்தார்களா ? இல்லையா ?

ஜனநாயகத்தின் சாபக்கேடு ஊழல், பின்னர் முதல்வரின் ஊழல் வழக்கு என்னானது ? தண்டனை கிடைத்ததா ? யார் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்கள் என்பது மீதிக்கதை…

நாட்டின் நிகழ்கால அரசியலை, கற்பனை கலந்து சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்பதை, தலைவனோ, தலைவியோ மக்கள் மீது வைத்திருக்கும் காதல்தான் நீதி என வசனங்கள் வரும்போது, தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button