ஜீ.வி. பிரகாஷ், சைந்தவி விவாகரத்து ! உண்மையும், பின்னணியும் !
இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி. பிரகாஷ், தனது பள்ளிப் பருவத்தில் சைந்தவி மீது காதல் வயப்ட்டு, இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் ஜீ.வி. பிரகாஷ் இசையமைப்பாளராகவும், சைந்தவி பின்னனி பாடகி யாகவும் இருவரும் இணைந்தே பயணித்து வந்தனர். பின்னர் திருமணம் செய்துகொண்டு 23 வருடங்களாக மலர்ந்த காதல் தற்போது முறிந்துள்ளது.
இதுசம்பந்தமாக விசாரித்தபோது.. ஜீ.வி. பிரகாஷ் நடிகராக ஆனதும் பெண்கள் விஷயத்தில் அப்படியும், இப்படியுமாக இருந்திருக்கிறார். இந்த தகவல் படப்பிடிப்பு தளத்திலிருந்து சைந்தவிக்கு தொடர்ந்து சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதன்பிறகு சைந்தவி ஜீ.வி யின் நெருங்கிய வட்டத்தில், தனக்கு தகவல் சொல்வதற்கென்றே ஒருவரை நியமித்திருக்கிறார்.
அதன்பிறகு “13” என்கிற படத்தின் படப்பிடிப்பு தலக்கோனம் காட்டுப்பகுதியில் நடந்து கொண்டிருந்த போது, ஜீ.வி. பிரகாஷின் அனைத்து நடவடிக்கைகளும் சைந்தவிக்கு உடனுக்குடன் தெரியவந்திருக்கிறது. அந்தப் படத்தில் இரண்டு நாயகிகள். ( என்னவாக இருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள் ). அதேபோல் “ஜெயில்” படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் ஜீ.வி. பிரகாஷ் எல்லை மீறி நடந்திருக்கிறார்.
பின்னர் உனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள் என சைந்தவி பலமுறை அன்பாகவும், அராஜகமாகவும் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் ஜீ.வி. பிரகாஷ் தன்னை மாற்றிக் கொள்ளாததால், இருவரும் பேசாமலேயே ஒரே வீட்டில் பல மாதங்கள் வசித்து வந்துள்ளனர். ( அதாவது சமீபத்தில் வெளியான “டியர்” படத்தில் ஜீ.வி யும், ஐஸ்வர்யா ராஜேஷும் ஒரே வீட்டில் பேசாமல் வசித்துக் கொண்டு விவாகரத்து கேட்பார்களே ) அதேபோல் தற்போது இருவரும் பிரிந்துள்ளனர். தேவை இல்லாத உறவுகளை உதறித்தள்ள முன்வராத காரணத்தால், ஆசை மனைவியை பிரிந்து, நிம்மதி இழந்து நிர்கதியில் நிற்கிறார் ஜீ.வி. பிரகாஷ்.
இனி ஜீ.வி. பிரகாஷின் சினிமா வாழ்கையும் கேள்விக்குறி ஆகியுள்ளது.