சினிமா

விஷ்ணு விஷால் நிராகரித்த தலைப்பில் சீயான் விக்ரம்

தமிழ் திரையுலகில்  இயக்குநர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப, தன் உடலை வருத்தி கதாப்பாத்திமாகவே மாறக்கூடிய நடிகர் சீயான் விக்ரம் மட்டுமே என்று சொன்னால் மிகையாகாது. சமீபத்தில் வெளியான “சித்தா” படத்தின் இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருக்கும் படத்திற்கு “வீர தீர சூரன்” என பெயர் வைத்திருக்கிறார்கள்.

இயக்குநர் முருகானந்தம் சொன்ன கதை மனதிற்கு மிகவும் பிடித்துப் போன நிலையில், அந்தக் கதைக்காக ஆரம்பத்திலேயே “வீர தீர சூரன்” என பெயர் வைத்து, ஃபஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. பின்னர் நியூமராலஜி சென்டிமென்ட் பார்த்து “வீர தீர சூரன்” தலைப்பை நிராகரித்துவிட்டு “கதாநாயகன்” என தற்போது பெயர் வைத்துள்ளார் விஷ்ணு விஷால்.

ஆனால் விஷ்ணு விஷால் வேண்டாம் என உதறித் தள்ளிய “வீர தீர சூரன்” தலைப்பைத்தான் இப்போது சீயான் விக்ரம் வைத்திருக்கிறார் என்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button