தமிழகம்

தமிழக-இலங்கை மீனவர்கள் சிக்கல்…

தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இப்பொழுது சிக்கலான நேரம். இரு தரப்பினர் மத்தியிலும் சில மோதல்கள் நடக்கின்றன. வலை போடும் மீனவர்களுக்கு எது எல்லை என்று தெரியாது.

இந்த எல்லைகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் 1974-1976ல் கடல் எல்லைகள் இரண்டு அரசாங்கங்களும் அமர்ந்து அதிகாரப்பூர்வமாக தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானிக்கப் பட்டாலும் எல்லைகளை மீனவர்கள் இதுதான் நமது எல்லை என்று அறிவது கஷ்டம். இப்பொழுது இரண்டு நாட்டு மீனவர்கள் மத்தியிலும் விரும்பத்தகாத முறையில் பகை உணர்வுகள் வளர்ந்த வண்ணம் உள்ளன.

இலங்கையில் உள்ள மீனவர்கள் என்ன சொல்கின்றனர் என்றால், “நாங்கள் சாதாரண படகுகள் வைத்துள்ளோம்” என சொல்கின்றனர். தமிழகத்தில் கிட்டத்தட்ட கோடியாக்கரையிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள மீனவர்கள் அதிகம். நமது மீனவர்கள் சில சமயங்களில் கடலில் எல்லை தெரிவது இல்லை. இப்படியான ஒரு நிலையில் இரண்டு தரப்பினற்கும் இடையே மோதல்கள் வருவது நல்லதல்ல. அதைப்போல ஈழ மீனவர்கள் முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை உள்ள பகுதியில் மீன்கள் வளமாக இருக்கின்றன.

அங்கே இலங்கையில் 3000 மீனவர்கள் இருக்கின்றார்கள் என்பது கணக்கு. தமிழகத்திலும் இங்குள்ள மீனவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இப்பொழுது ஈழத்தமிழர்கள் பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், இரு நாட்டு மீனவர்களிடையே நடக்கின்ற சிக்கல்களைத் தீர்க்க வேண்டும். இரண்டு நாட்டு மீனவர்களை அழைத்தும் பேச வேண்டும் என்கிற நிலை இன்றைக்கு இருக்கின்றது.

ஏற்கனவே இலங்கையில் 2017-ல் அங்குள்ள மீனவர்கள் ஒழுங்குபடுத்தும் சட்டமும் வந்தது. சட்டம் வந்தது. இது தமிழக மீனவர்களுக்கு எதிராக இருக்கும் என சர்ச்சைகள் எழுந்தன.

இலங்கையில் மாகாண கவுன்சில் என்று அமைக்கப்பட்ட அமைப்புகளுக்கே மீன்வளத் துறையில் அதிகாரங்கள் எதுவும் கிடையாது.

ஏற்கனவே இலங்கையில் குருநகர் சம்பவம் அங்கு உள்ள மீனவர்களை மிகவும் பாதித்தது. இதற்கிடையில் இலங்கை, ஜப்பான், இந்தியா என்ற கூட்டு ராணுவ நடவடிக்கையில் மீனவர்களுக்கும், அங்குள்ள மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

அதைப்போல தமிழக மீனவர்கள் பக்கமும் கடுமையான பாதிப்புகள் மிகவும் கடுமையானது. கடந்த 1964இல் தொடங்கி இன்று வரை நமது தமிழக மீனவர்கள் துயரங்களை சந்திக்கின்றனர். கச்சத்தீவு இரண்டு நாடுகளின் மீனவர்களுக்கும் நடுநிலையாக இருந்தாலும், நமது தமிழக மீனவர்கள் எல்லைகள் தெரியாமல் சென்றுவிடுகின்றனர். தமிழக மீனவர்கள் இதுவரை கிட்டத்தட்ட 800 பேர் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப்போலவே பல லட்சக்கணக்கான மதிப்புள்ள தமிழக படகுகள் சிங்கள கடற்படையால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நமது தமிழக மீனவர்கள் பட்டபாடு அதிகம். இதையும் சிந்திக்க வேண்டும் என்ற அளவில் இரண்டு நாட்டு மீனவர்கள் பிரச்சினை இப்பொழுது தீர்க்கப்பட வேண்டும்.

தமிழக மீனவர்கள் சொல்ல முடியாத பல பாதிப்புகளுக்கும் சிக்கல்களுக்கும் ஆளாகியுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களாக இருக்கட்டும். அதேபோல் நாகப்பட்டினம் மீனவர்களாக இருக்கட்டும், கன்னியாகுமரி வரை மீனவர்கள் காணாமல் போய்விடுவார்கள், சிங்கள அரசால் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் இலங்கை கடற்படையினரால் பட்டப்பாடு சாதாரண பாடு அல்ல.

சற்று மோதிக் கொண்டிருக்கின்ற ஒரு துவக்கமாக இருக்கின்றது. இந்த விரோதம் உச்சத்திற்குச் செல்லும் முன் எதிர்வினை அதிகமான இல்லாத அளவில், துவக்கத்திலேயே இதுகுறித்துப் பேசி சரிசெய்ய வேண்டியது இந்திய அரசின் கடமை ஆகும் என்பதை உணர வேண்டும்.

இந்த செய்திகள் அதிகமாக பத்திரிகைகளில் வரவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் அதிகமாகும்போது நிச்சயமாக தலைப்புச் செய்தியாக வரலாம். அதற்கு முன் இந்தச் சிக்கலை தீர்த்து விட வேண்டும். நமது தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் உள்ள சிக்கல்களைத் தீர்க்க வேண்டும்.

இதையெல்லாம் கவனித்து இந்திய அரசு, தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாமல், இலங்கை அரசுடன் பேச வேண்டும் அங்குள்ள மீனவர்களும் உருவான சிக்கல்கள் என்னவென்று அறிந்து அந்த நாட்டு தரப்பிலிருந்தும், அவர்களுக்கான உதவியை செய்யவேண்டும் என்பதுதான் ஒரு பொதுவான கருத்தாக அமையும். இதில் வீண் விரோதம் வேண்டாம் என்பது பொதுவான கருத்து.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button