விமர்சனம்

நடிகர் கவினுக்கு “ஸ்டார்” ஒளி வீசுகிறதா ? “ஸ்டார்” படத்தின் திரைவிமர்சனம்

RASE EAST ENTERTAINMENT & SRI VEKATESWARA CINI CHITHRA நிறுவனங்கள் சார்பில், B.V.S.N பிரசாத், ஶ்ரீநிதி சாகர் தயாரிப்பில், கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் நடிப்பில், இளன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஸ்டார்”.

கதைப்படி.. நடுத்தர குடும்பத்தில் பிறந்த கலையரசன் பள்ளியில் படிக்கும் போதே நடிகனாக வேண்டும் என்கிற கணவனோடு வளர்கிறான். பள்ளிப்படிப்பை முடித்ததும் கல்லூரியில் சினிமா சம்பந்தமான விஸ்காம் படிப்பை படிக்க விரும்புவதாக பெற்றோரிடம் கூற, அவரது தந்தை பாண்டியனுக்கு ( லால் ) விருப்பம் என்றாலும், தாய் கமலா ( கீதா கைலாசம் ) பொறியியல் படித்தால்தான் எதிர்காலம் நன்றாக இருக்கும் என பொறியியல் கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள்.

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியை பார்த்ததும் காதல் வயப்பட்டு அவளிடம் சில்மிஷம் செய்ய, அவள் அனைவர் முன்னிலையில் கண்ணத்தில் அறைந்து விடுகிறாள். பின்னர் அனைத்து மாணவிகளும் அவனைப் போய் அடித்துவிட்டாயே, அவனது பார்வை எங்கள் மீது விழாதா என நாங்கள் ஏங்கும் நிலையில்… என பெண்கள் அவன் புராணம் பாட.. அவன்மீது அவளுக்கு காதல் மலர்கிறது.

இதற்கிடையில் டெல்லியில் நடிப்பு பயிற்சி பட்டறை வகுப்பில் சேர்ந்து நடிப்பை கற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்திருந்த நிலையில், அதற்கான அழைப்பு வருகிறது. தந்தையின் உறுதுணையோடு டெல்லிக்கு செல்கிறான். அங்கு வந்துள்ளவர்களின் திறமையை பார்த்து வியப்படைகிறான். இவனுக்கு நடிப்பு வரவில்லை என அந்த மாஸ்டர் இவனை நிராகரிக்க, எப்படியாவது அங்கு சேர்ந்து நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும் என அங்கேயே சுற்றித்திரிகிறான்.

நடிகனாக வேண்டும் என நினைத்த கலையரசனின் லட்சியம் நிறைவேறியதா இல்லையா என்பது மீதிக்கதை…

தந்தையின் கணவு நிறைவேறாத நிலையில், மகன் ஆசைப்பட்டதை நிறைவேற்ற துடிக்கும் தந்தையாக லால், சினிமா, சினிமா என சீரழியாமல் வேறு ஏதாவது வேலைக்குப் போய் நன்றாக சம்பாதித்தால், நாம் பட்ட கஷ்டங்கள் இல்லாமல் மகனாவது நன்றாக இருப்பான் என நினைக்கும் தாய் கதாப்பாத்திரத்தில் கீதா கைலாசம் என இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

நாயகன் கவினுக்கு டாடா படம் கொடுத்த வரவேற்பு, இந்தப் படத்திற்கு இல்லை என்றே சொல்லலாம். அந்த படத்தின் கதைக்களம் இளைஞர்களின் இதயத்தை வருடும் விதமாக அமைந்ததால் முதல் படத்திலேயே அதிகமான வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் கதைக்களம் சினிமாவில் நடிகனாக எவ்வாறு கஷ்டப்பட வேண்டும் என அமைந்ததால் வரவேற்பு குறைவுதான். இதற்குமுன் இதுபோன்ற கதைகள் வந்து வந்த வேகம் தெரியாமல் மறைந்து போன வரலாறும் அனைவரும் அறிந்ததே. வளரும் நாயகன் கவின் வரும் காலங்களில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால், அவர்மீது ஸ்டார் ஒளி வீசும்.

படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button