கள்ளத்தனமாக மது விற்பனை ! கைது செய்து சிறையில் தள்ளிய உடுமலை போலீசார்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை மூடியதும் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவது அனைவரும் அறிந்ததே, அதேபோல் டாஸ்மாக் கடை இல்லாத பகுதிகளில் டாஸ்மாக் கடையிலிருந்து மொத்தமாக மது பாட்டில்களை கொள்முதல் செய்து வீடுகளில் வைத்து விற்பனை செய்து வருவதும் அனைவரும் அறிந்ததே. அதேபோல் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்த போடிபட்டி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக உடுமலைப்பேட்டை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை உதவி ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்ததில் போடிபட்டி காமராஜர் நகரை சேர்ந்த கண்ணப்பன் ( வயது 47 ) என்பவர் சட்டவிரோதமாக அவரது வீட்டில் வைத்து மது விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. கையும் களவுமாக காவல்துறையினரிடம் சிக்கிய கண்ணப்பனை விசாரணை செய்ததில் அவரிடமிருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.