பழனி லில்லிபுட்ஸ் பள்ளியின் ஆண்டு விழா ! குழந்தைகளின் மத நல்லிணக்க கலை நிகழ்ச்சிகள் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரில் P.S.K.L LILLIPUTS மாண்டிசோரி பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அனைத்து மதங்களை சேர்ந்த மகளிரும் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கியது, மதநல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. விழாவில் பாடத்திட்ட வல்லுநர், இயற்கை விவசாயி மற்றும் விஜய் டிவி ” நீயா நானா” புகழ் இளங்கோ கல்லணை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவிற்கு P.S.K.L குழுமத்தின் தலைவர் கா. ருக்மாங்கதராஜு தலைமை ஏற்க, பள்ளி தலைமை ஆசிரியர் கா.பத்மாவதி நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க,
இந்தவருடம் ஸ்பேஸ் எக்ஸ் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக அரங்கேற்றினர். குழந்தைகள், பண்நாட்டு மொழித்திறமை, மனனத்திறமை, சிலம்பம், நாட்டியம், வீர சாகசங்கள், கணிதத் திறமை, அறிவியல் மற்றும் பூலோக திறன்களை அனைவரும் மனம்கவரும் விதத்தில் சிறப்பாக வெளிப்படுத்தினர்.
இப்பள்ளியில் மிகச் சிறிய வயது முதல் அனைத்து விதமான பாடங்களும் மாண்டிசொரி வழியில் சிறந்த முறையில் பயிற்று வைக்கப்படுகிறது. இரண்டரை வயது முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகள், 3 மணி நேரம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக்கட்டி அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றனர்.