தமிழகம்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : ஒரே மாதத்தில் 355 பேர் போக்சோவில் கைது !

ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராதாகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் ஜவுளி வியாபாரமும் ரியல் எஸ்ட்டேட் தொழிலும் செய்து வருகிறார். ராதாகிருஷ்ணன் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் கல்லூரியில் படித்த அந்த மாணவியின் தோழிகளுக்கும் அவ்வபோது ஆபாச வீடியோவை அனுப்பி அவர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி தனக்கு நிகழ்ந்ததை பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த புகாரின் அடிப்படையில் ராதாகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராதாகிருஷ்ணனை சிறையில் அடைத்தனர்.
கோவையைடுத்த கோவில்பாளையம் அருகே உள்ளது கொண்டையம் பாளையம் கிராமம். இங்கு உள்ள மாரியம்மன் கோவில் பூசாரி தண்டபாணி (65) என்பவர் கடந்த 20 நாட்களுக்கு முன்னர், கோவிலின் அருகே விளையாடி கொண்டிருந்த அதே கிராமத்தை சார்ந்த 8 வயது சிறுமியை கோவிலின் உள்ளே அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்தச் சிறுமிக்கு உடலில் வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அந்தச் சிறுமியை பெற்றோர் மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சோதனை செய்த மருத்துவர் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தனது தாயிடம் விவரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாய், இச்சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் விசாரித்ததில், குற்றத்தை உறுதி செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு கோவில் பூசாரி தண்டபாணியை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் பூசாரி தண்டபாணியை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பீமநகரை சேர்ந்த 6 வயது சிறுமி தன் வீட்டுக்கு அருகில் சைக்கிள் கடை வைத்துள்ள முகமது இஸ்லாம் (43) என்பவரிடம் நெருங்கி பழகி வந்துள்ளாள். அவருக்கும் மகள் இல்லை என்பதால் மகள் அந்த நபரிடம் காட்டிய நெருக்கத்தை சிறுமியின் பெற்றோரும் கண்டு கொள்ளவில்லை.

கடந்த 26ம் தேதி சிறுமியை தூக்கிக் கொண்டு சென்ற முகமது இஸ்லாம், ஐஸ் க்ரீம் வாங்கி தந்துள்ளார். பிறகு சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதனால் அழுது கொண்டே வீடு திரும்பினாள் சிறுமி.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, பெற்றோர்கள் கேட்டபோது, சிறுமி நடந்த விவரத்தை கூறியுள்ளார். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக அப்பாசிடம் சென்று விசாரித்த போது, அவர் நடந்தவற்றை வெளியே கூறினால் சிறுமியை கொன்று ஆற்றில் வீசிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ருச்சி கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

முகமது அப்பாஸை கைது செய்த காவல்துறை, வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி மகிழினி தீர்ப்பு கூறினார்.
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கிய முகமது அப்பாஸுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அதை தொடர்ந்து குற்றவாளி திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
தமிழகத்தில் சிறுமியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏப்ரல் மாதத்தில் மட்டும் 355 காமுகர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்கின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வெளியேறும் சிறுமியரை காமுகர்களின் பார்வையில் சிக்கி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர். சேலம் மாநகரில் உள்ள மூன்று அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் ஏப்ரல் முதல் நாள் துவங்கி இதுவரை ஏழு பேரும், சேலம் மாவட்டத்தில், உள்ள ஐந்து அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 15 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக காவல்துறையின் குற்ற ஆவண காப்பக அதிகாரிகள் அளித்த தகவல்படி, மாநிலம் முழுவதும் உள்ள 385 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும், கடந்த மார்ச் மாதத்தில் 175 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளனர் என்றும், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை 355 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் ஏப்ரல் மாதத்தில் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது, காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தகவல் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெண் ஆய்வாளர்களால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆண் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்த பெண் காவலர், உதவி ஆய்வாளர் ஆகியோரில் ஒருவர் கட்டாயம் உடன் இருக்க வேண்டும். இந்த விதியால், வழக்குப்பதிவு செய்வதை ஆண் ஆய்வாளர்கள் தவிர்ப்பதோடு, பெண் ஆய்வாளர்களுக்கு புகாரை மாற்றி விடுகின்றனர். எனவே இச்சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு, குறைந்த பட்சம் ஆறு மாதம் ஜாமின் கிடைக்காத வகையில் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டம் ஒழுங்கு ஆண் காவல் ஆய்வாளர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அப்போது தான் சிறுமியரை குறி வைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் காமுகர்களை முழுமையாக ஒடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button