முதுமையிலும் இளமை…பல்லடத்தில் மகிழ்ச்சியாக வாழும் தம்பதியர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வயதான தம்பதியர் இளமையுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலையில் வசித்து வருபவர் சுப்பையன்.மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் தனது 71 வது வயதில் தனது மனைவி சின்னமணியுடன் வீட்டு மொட்டை மாடியில் இயற்கை விவசாயம் செய்து சாதனை படைத்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக வீட்டு மொட்டை மாடியில் இயற்கை முறையில் அரிய கீரை வகைகள் மற்றும் மூலிகை குணம் கொண்ட ஆடுதொடை, சிறியா நங்கை, துளசி உள்ளிட்டவைகளை பயிறிட்டுள்ளார். மேலும் வீட்டிற்கு தேவையானது காய்கறி மற்றும் பழவகைகள் பயிறிட்டு விளைச்சல் கண்டுள்ளார்.
தனது அனுபங்கள் குறித்து கூறிய சுப்பையன், முதுமையில் நோயின்றி வாழ தானும் தனது மனைவியும்.யோகா பயிற்ச்சியை தொடர்ந்து செய்து வருவதாகவும், தினமும் சுமார் 2 மணி நேரம் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தில் பராமரிப்பு பணிகள் செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் கடந்த பல ஆண்டுகளாக உடலில் தங்களுக்கு எந்த ஒரு உபாதையும் ஏற்பட்டதில்லை எனவும், கொரானா ஊரடங்கு காலத்தில் காய்கறிக்கோ, பழங்களுக்கோ தட்டுப்பாடின்றி மொட்டை மாடியில் விளையும் பொருட்களை சமையலுக்கு போதுமானதாக உள்ளதாக தெரிவித்தார்.
வயதான தம்பதியர் முதுமையில் இளமையுடன் இயற்கை விவசாயம் செய்து தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்றி சாதனை படைத்து வருவது அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.