தமிழகம்

முதல்வர் காப்பீடு… மத்திய அரசு திட்டமா ?, மாநில அரசு திட்டமா ?

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி திட்டப் பொறுப்பாளர் ஆ. அண்ணாதுரை தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அண்ணாதுரை தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து மருத்துவமனைகளில் விழிப்புணர்வு தகவல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழக அரசின் இந்நாள் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் விளம்பரத்தில் PMJAY என குறிப்பிடப்பட்டுள்ளதற்கு விரிவாக்கம் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் போஜனா என்பதாகும் எனவும், இத்திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதால் இதன் மூலம் பனை, தென்னை தொழிலாளர்கள் பயனடைவார்கள் எனவும், இத்திட்டத்தின் மூலமாக சுமார் 1300 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சைபெறலாம் என தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஆண்டொன்றிற்கு ரூபாய். 5 லட்சம் வரை மருத்துவசிகிச்சை பெற முடியும் என தெரிவித்தார். மேலும் அண்ணாதுரை கூறுகையில் மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு விளம்பரப்படுத்தும் போது பிரதம மந்திரியின் புகைப்படம் இடம் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மாநில அரசு திட்டமா அல்லது மத்திய அரசு திட்டமா என விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு பதில் மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து செயல்படுத்தும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பிரதம மந்திரி மோடியின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button