வெளிநடப்பு செய்த ஆளுநர்..! வானதிக்கு வலுக்கும் எதிர்ப்பு..!.?.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் தொடங்கியது. தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி அவரது அனுமதியுடன் தயாரிக்கப்பட்ட உரையை பேரவையில் ஆளுநர் வாசிப்பது தான் காலங்காலமாக கடைபிடிக்கப்படும் மரபு.
அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியின் கொள்கைகளும், கொள்கைகளை வகுத்த தலைவர்களின் பெயர்கள் இடம்பெறுவது வழக்கமான ஒன்றுதான். தலைவர்களின் பெயர்களை வாசிக்கக் கூடாது என்பதற்காக, தமிழ்நாடு, திராவிடம், சமூகநீதி, அம்பேத்கர் தொடங்கி அனைத்து தலைவர்களின் பெயர்களையும் படிக்காமல் ஆளுநர் புறக்கணித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இது சம்பந்தமாக பேசுகையில்… அரசு கொடுத்த உரையைத் தான் ஆளுநர் படிக்க வேண்டுமா ? அவருக்கு சொந்தமான கருத்துக்களை பேசக்கூடாதா ? என கேள்வி எழுப்பியுள்ளார். இவரது பேச்சிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அதாவது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் போது… ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலுடன் தயாரித்துக் கொடுத்த உரையை படிக்காமல் புறக்கணித்துவிட்டு ஜனாதிபதி தனது சொந்தக் கருத்துகளை வாசித்தால், ஏன் ஒன்றிய அரசு கொடுத்த உரையைத் தான் ஜனாதிபதி வாசிக்க வேண்டுமா ? என வானதி சீனிவாசன் டெல்லிக்கு எதிராக கேள்வி எழுப்புவாரா ?
பாரதிய ஜனதா கட்சியினர் ஆளும் மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர்கள் மூலம் நெருக்கடியை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொடுத்து வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசின் நிரந்தரத் தன்மையை கலைக்க நினைக்கிறார்.
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு மாநில உரிமைக்கு எதிராக ஆளுநர் நடந்து கொள்ளும்போது, சுயநலத்தோடு பதவி சுகத்திற்காக வானதி சீனிவாசன் பேசி வருகிறார் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.