“வாரிசு” படத்தின் கதை என்ன ? அப்பாவுக்கு அன்புடன்… தெலுங்கு படத்தின்….
பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் தில்ராஜ் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம்”வாரிசு”. இந்தப் படம் குடும்பப்பாங்கான கதையம்சம் கொண்ட படம் எனவும், அனைவரும் குடும்பத்தினருடன் கண்டு ரசிப்பார்கள் எனவும், படம் வெளியாவதற்கு முன் பேசப்பட்டது.
படத்தை பார்த்த பிறகுதான் தெரிந்தது, இதே கதையம்சத்தில் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த “நானகு பிரேமதோ” என்ற படத்தின் தழுவல் தான் தற்போது வெளிவந்துள்ள “வாரிசு” படத்தின் கதை.
“நானகு பிரேமதோ” ( தெலுங்கு )
ராஜேந்திர பிரசாத் தின் இரண்டு மகன்களும் வீட்டைவிட்டு வெளியேறி விடுவார்கள். மூன்றாவது மகன் ஜூனியர் என்.டி.ஆர், வில்லன் கஜபதி பாபுவின் மகளை காதலித்து தந்தையை ஜெயிக்க வைப்பார். இரண்டு மகன்களையும் ஜூனியர் என்டிஆர் வீட்டிற்கு அழைத்து வருவார். அதன்பிறகு கஜபதி பாபு இறந்து விடுவார்.
“வாரிசு”
சரத்குமாரின் இரண்டு மகன்களும் வீட்டைவிட்டு வெளியேறி விடுவார்கள். மூன்றாவது மகன் விஜய், வில்லன் பிரகாஷ் ராஜ் ஏற்பாடு செய்த பைனான்ஸியர் எஸ் ஜே சூர்யா மூலமாக தந்தையை ஜெயிக்க வைப்பார். பின்னர் இரண்டு மகன்களையும் வீட்டிற்கு விஜய் வீட்டிற்கு அழைத்து வருவார். அதன்பிறகு சரத்குமார் இறந்து போகிறார்.
முழுமையான ஒப்பீடு வீடியோவில் பிறகு பார்க்கலாம்.
இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த சில படங்கள் தொடர்ச்சியாக ஏற்கனவே வெளியான படங்களின் கதை என்று பேசப்பட்டது. அந்த படத்தின் இயக்குனர்கள் விமர்சனத்துக்கு உள்ளானதும் உண்டு. ஏ.ஆர். முருகதாஸ், அட்லி வரிசையில் வாரிசு படத்தின் இயக்குனரும் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
படத்தின் முழு விமர்சனத்தை அடுத்த செய்தியில் பார்க்கலாம்.