நாற்காலி செய்தியின் எதிரொலி ! கோவையை கலக்கிய ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் “கும்கி” கைது
கோவையை கலக்கும் ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் கும்கி என்பவரை பற்றி ஆதாரங்களுடன் கடந்த 21ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி அறிந்த 24 மணி நேரத்திற்கு உள்ளாக, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு, கும்கி என்கிற குணசேகரன் என்பவரை கையும் களவுமாக பிடித்து, ( CSCID UNIT, Cr No. 102 / 2024. V/s 6(4) of TNSC ( RDCC ) Oders-1882 r/w 7(1)a (11) of Ec Act 1995-ன்படி ) வழக்கு பதிவு செய்து கைது செய்ததோடு, அவரிடமிருந்து சுமார் 700 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஒரு டாட்டா ஏஸ் வாகனத்தை ( TN-66 X 5255 ) பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர் கும்கி என்கிற குணசேகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். செய்தி வெளியானதும் துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் நாற்காலி செய்தி குழுமத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
இது சம்பந்தமாக அப்பகுதியினர் கூறுகையில்.. நீண்ட நாட்களாக ரேஷன் அரிசி கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த கடத்தல் மன்னன் கும்கி என்கிற குணசேகரன் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், மற்ற ரேஷன் அரிசி கடத்தல் வியாபாரிகள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர் என்கிறார்கள்.