தமிழகம்

நரிகுறவ பெண் பாலியல் வன்முறை செய்து கொலை: இடையூறாக இருந்த 3 வயது குழந்தையும் கொலை செய்த கொடூரம்

ஆவடி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கும்பல், அதற்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையையும் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் காவலர் குடியிருப்புக்கு அருகே உள்ளது  நரிகுறவர் காலனி. இங்கு நரிகுறவர் இனத்தைச் சேர்ந்த அருள் பாண்டியன், ரோஜா ஆகிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பார்த்திபன் என்ற மகனும், சுஜாதா என்ற மகளும்  உள்ளனர். இந்த நிலையில் சாலையோரம் ஊசி மணி விற்கும் அருள் பாண்டி, பொங்கல் வியாபாரத்திற்காக தன் மகனுடன் திருத்தணி சென்றுள்ளார்.

இரவு பெண் குழந்தை சுஜாதாவுடன் ரோஜா தனியா தூங்கியுள்ளார். அப்போது வீட்டிற்கு நுழைந்த மர்ம நபர்கள் ரோஜாவை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இதற்கு இடையூறாக இருந்த அவரது மூன்று வயது மகள் சுஜாதாவையும் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பி சென்றனர்.

பின்னர் அதிகாலை ரோஜா வீட்டிற்கு சென்ற அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். அங்கு ரோஜா அலங்கோலமாக கிடந்துள்ளார். அருகே அவரது மகளும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில்   சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை தொடர்பாக அதே பகுதியில் வசித்து வந்த விஜய், ராஜ்கமல், வீரகுமார், தீபன் ஆகிய நான்கு பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தாய், மகள் கொலை செய்யப்பட்ட இடத்தில் விசாரணைக்கு ஜான்சி என்ற நாய் வரவழைக்கப்பட்டது. அப்போது வீட்டில் இருந்து மோப்பம்பிடித்த நாய் காவல் நிலையம் சென்று நின்றது. இதனால் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வீரகுமார் கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இதனைத்தொடர்ந்து வீரகுமாரை சிறையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button