விமர்சனம்

உறவுகளின் உணர்வுகளை “கனெக்ட்” செய்கிறதா ? கனெக்ட் படத்தின் திரைவிமர்சனம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா, வினய், சத்யராஜ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கனெக்ட்”

வினய், நயன்தாரா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நயன்தாராவின் தந்தை சத்யராஜ் உள்ளிட்ட நான்கு பேரும் மகாபலிபுரம் கடற்கரையில் உள்ள விடுதியில் அமர்ந்திருக்கும் போது.. வெளிநாடு சென்று இசைப்படிப்பு படிக்க வேண்டும் என நயன்தாராவின் மகள் தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். அதற்கு பள்ளிப்படிப்பை முடித்த பிறகு செல்லலாம் என நயன்தாரா மகளை சமாதானப்படுத்துகிறார்.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அப்போது மருத்துவரான வினய் வீட்டிற்கே வராமல் மருத்துவமனையிலேயே தங்கி பல உயிர்களைக் காப்பாற்றுகிறார். தனது மனைவி, மகளுடன் வீடியோ கால் மூலம் நேரம் கிடைக்கும்போது பேசிவருகிறார். நோய்த்தொற்று தீவிரமான சமயத்தில் வினய்யும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைகிறார்.

இதனால் நயன்தாராவும், அவரது மகளும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். தந்தையின் செல்லமாக வளர்ந்ததால் தந்தையின் ஆன்மாவுடன் பேச வேண்டும் என்கிற ஆர்வத்தால் ஆன்லைன் மூலம் ஒரு பெண் மந்திரவாதியிடன் பேசுகிறார். அந்த பெண் மந்திரவாதியின் தவறான வழிகாட்டுதலால் கெட்ட ஆவி அந்த சிறுமியின் உடலுக்குள் புகுந்து அவளை ஆட்டிப் படைக்கிறது.

இதனால் அந்தப்பெண் படும் கஷ்டங்கள், மகளைக் காப்பாற்ற நயன்தாரா சந்திக்கும் சிரமங்கள், இறுதியில் கெட்ட ஆவியிடமிருந்து தன் மகளைக் காப்பாற்றினாரா ? பழி கொடுத்தாரா ? என்பது மீதிக்கதை….

கொரோனா காலகட்டத்தில் ஒருவரையொருவர் நேரில் தொடர்பு கொள்ள முடியாத சமயத்தில் ஆன்லைன் மூலம் ஆவியை விரட்டும் முறை புதுமையான காட்சியாக அமைத்திருக்கிறார் இயக்குனர். கிருஸ்தவ குடும்பத்தில் புகுந்த கெட்ட ஆவியை மும்பையில் உள்ள பாதிரியார் ஆன்லைன் மூலம் சில மந்திரங்களை ஜெபிக்கச் சொல்லி ஆவியை விரட்டி குழந்தையை காப்பாற்றிய விதத்தையும் புதுமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். கனவனை இழந்து வாடும் மனைவி, தந்தையின் பிரிவால் மகளின் வேதனை, இளம் வயதிலேயே விதவையான மகளை நினைத்து தந்தையின் வேதனை என குடும்ப உறவுகளின் உணர்வுகளை கனெக்ட் செய்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

செலவே இல்லாமல் குறைந்த பட்செட்டில் கிருஸ்தவ குடும்பத்தில் நடக்கும் கதையாக, குறைவான நடிகர், நடிகைகளுடன் படத்தை எடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். படத்தில் நடித்துள்ள அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button