தமிழகம்
பரமக்குடியில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு !

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு குங்குமம், சந்தனம், மாலை அணிவித்து பல வகையான சாதம் கொடுத்து சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேதுகருணாநிதி, கவுன்சிலர்கள் அப்துல் மாலிக், பிரபா சாலமன், தனலட்சுமி, ராதா பூசத்துரை, ஜீவரத்தினம், கிட்டு மற்றும் எஸ்எம்டி அருளானந்து, சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.