“தமில்” வாழ்க ! “தமில்” மொழி வாழ்க ! நடிகை குஷ்புவின் ஆர்வ மிகுதியால்….
தமிழ் கலை, கலாச்சாரத்தை பெருமைப்படுத்தும் விதமாக காசியில் தமிழ் சங்கமம் விழா நடைபெற்றது. இந்த விழாவை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து துவக்கி வைத்தார்.
இது சம்பந்தமாக ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார் பிரதமர் நரேந்திரமோடி. பிரதமரின் ட்விட்டை ரீ ட்விட் செய்த நடிகை குஷ்பு, தமிழ் நாட்டில் வாழ்வது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று ஆங்கிலத்தில் பதிவு செய்திருக்கிறார். இதோடு இல்லாமல் ( தமில் வாழ்க, தமில் மொழி வாழ்க ) பதிவு செய்துள்ளார்.
நடிகை குஷ்புவின் இந்த ட்விட்டர் பதிவானது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குஷ்பு ஆங்கிலத்தில் பதிவு செய்ததோடு நிறுத்தியிருந்தால் தேவையில்லாத சர்ச்சையை தவிர்த்திருக்கலாம். எனக்கும் தமிழ் தெரியும் என காட்டிக் கொள்வதற்காக ஆர்வ மிகுதியால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.