அரசியல்தமிழகம்தமிழகம்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு துணைபோகும் தாசில்தார்கள்…
தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா..?

நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்பணிப்பபோடு தமிழக அரசு செயல்பட்டுவருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமைச்செயலாளர் வே.இறையன்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் வே.இறையன்பு சென்னை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் நீர்நிலைகளை பாதுகாக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நீர்வள ஆதராங்களை பெருக்கி வீட்டு உபயோகம், வேளாண்மை, தொழில்சாலைகள் பயன்பாட்டிற்கான நீர் தேவைகளை பூர்த்தி செய்யவும் தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றிவருவதகாவும், கடந்த 2020ம்ஆண்டே இதுதொர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பரிந்துரைகளின்படி, அரசு புறம்போக்கு நிலங்களில் வழிகாட்டி மதிப்பீடு பூஜ்யம் என மாற்றப்பட்டுள்ளதாகவும், நீர்நிலைகளை பதிவுசெய்யக்கூடாது என பத்திரப்பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதேபோல நீர்நிலை கட்டுமானங்களுக்கு எந்தவித மின்இணைப்பும் தரக்கூடாது, ஊரக வளர்ச்சித்துறை கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி அளிக்ககூடாது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தலைமைச்செயலாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நீர்வள மேம்பாட்டுக்காக தனித்துறையே உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் ஆக்கிரமிப்புகள் இல்லாத நீர்நிலைகளை உருவாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு கடந்த ஜீலை மாதம் அனைத்து மாவட்ட ஆட்சியளர்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அதில் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சிறு குட்டைகள் குளங்களை உள்ளுர் விவசாயிகள் இளைஞர்களின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட உள்ளததாகவும், சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அதன்படி மாவட்ட ஆட்சியர்கள் அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரித்து, வருவாய்துறை செயலாளருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நீர்நிலை ஆக்கிமிப்புகளை அகற்றவது மட்டுமல்லாமல், நீர்நிலைகளின் நீர் இருப்பின் அளவை முன்பிருந்ததுபோல் பேணவும் நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்படும் நீர்நிலைகளை தூர்வாரப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு பழைய நிலைக்கே கொண்டுவரப்பட்டு உரிய தரத்துடன் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையை பொறுத்தவரை நீர்நிலை ஆதாரங்களில் நீர் இருப்பு திறமையாக கையாளப்பட்டு, மழைகாலங்களில் திடீர் என திறந்துவிடப்பட்டு வெள்ளப்பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த மாதம் நான்குமுறை பெய்த கனமழையால் ஆயிரம் மில்லி மீட்டருக்கு மேல் மழை இருந்ததாகவும் இதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வில்லிவாக்கத்தில் இசா ஏரி புறம்போக்கு
நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடம்

தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்பணிப்போடு செயல்பட்டுவருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் நீர்நிலைப் புறம்போக்கு நிலங்களை மீட்கக்கோரி அரசு அதிகாரிகளிடத்தில் கொடுக்கப்படும் புகார்கள் அனைத்தும் கிணற்றில் போட்ட கல்லாகத்தான் இருக்கிறது.

புதிய அரசு பொறுப்பேற்றவுடன் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றியது. ஆனால் வருவாய்த்துறையில் ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தமிழகம் முழுவதும் உள்ள தாசில்தார்களை இடமாற்றம் செய்யாதவரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எளிதானதல்ல. உயர்அதிகாரிகளிடம் இருந்து நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டாலும் தாசில்தார்கள் கிடப்பில் போட்டுவிடுகிறார்கள்.

உதாரணத்திற்கு சோழிங்கநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை பத்திரப்பதிவு செய்திருப்பதாக முதலமைச்சர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டு, அந்த புகார் சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், கிண்டி வருவாய் அதிகாரி மூலமாக சோழிங்கநல்லூர் தாசில்தாருக்கு தபால்கள் அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேநிலை தான் தமிழகம் முழுவதும் நிலவுகிறது.

பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்புகளுக்கு தாசில்தார்களே துணைபோகும் நிலையும் காணப்படுகிறது. ஆகவே தமிழக முதலமைச்சர் தமிழகம் முழுவதும் உள்ள தாசில்தார்களை உடனடியாக நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button