சமுதாயத்தில் ஊழல் வேர்கள் பரவி, கரையான் போல் செல்லரிக்க செய்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 1500 ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் மதுரையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பாஸ்கரன் என்பவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இவரை மீண்டும் சாதாரண பதவியில் சேர்க்க தனிநீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.
அதே சமயம் ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகளுக்கு எந்தப் பதவி உயர்வு வழங்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், லஞ்சம் பெறுவது தற்போது வாடிக்கையாகி விட்டதாக வேதனை தெரிவித்தனர்.