அரசுப் பள்ளி ஆசிரியையின் அத்துமீறல்..! அதிர்ச்சியில் கல்வி அலுவலர்கள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த காரத் தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் சாந்தி பிரியா வகுப்பில் பாடம் நடத்தாமல் சொந்தப் பிரச்சனைகளைப் பேசி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து காரத் தொழுவு பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியை சாந்தி பிரியா மீது கல்வித்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் கணித ஆசிரியை சாந்தி பிரியா பாட வேளையில் பாடம் நடத்தாமல் அவர் சொந்த குடும்ப விஷயங்களை கூறியதாகவும், மாணவி ஒருவரை தனது மகனிடம் பேசச் சொல்லி வற்புறுத்தியதாகவும் பல அதிர்ச்சூட்டும் தகவல்களை மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளியில் பாட வேலை நேரத்தில் பாடங்களை நடத்தாமல் தனிப்பட்ட முறையில் ஒரு மாணவியை தனது மருமகள் என சக ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களிடம் கூறி வந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அந்த மாணவியின் புகைப்படம் கேட்டு தொந்தரவு செய்துள்ளர், மாணவிகளிடம்
ஒவ்வொரு நாள் இரவு தூங்கும் பொழுதும் மாணவிகள் அந்த ஆசிரியையின் கணவரை நினைத்துக் கொண்டு தூங்க வேண்டும் என கூறியதாக மாணவிகள் தெரிவித்ததை கேட்டு கல்வி அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இரவு நேரங்களில் பாடம் தொடர்பாக பேச வேண்டும் என பலமுறை மாணவிகளை தொடர்பு கொள்வதும், அழைப்பை ஏற்க மறுத்தால் தேர்வு மதிப்பெண்ணில் கை வைப்பேன் என மிரட்டியதாகவும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை விசாரணையின் போது மாணவிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல மாணவிகளை தேவையற்ற காரணங்களுக்காக தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளியில் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட ஆசிரியை சாந்தி பிரியாவை பணி மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார் . மேலும் காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.