தமிழகம்

நித்யானந்தா உருவத்தில் “பாஸ்கரானந்தா” தனது ஆசிரமத்தை சேதப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு திடீரென சொகுசு காரில் சாமியார் ஒருவர் வந்து இறங்கியவுடன் காவல் நிலையமே பரபரப்புக்குள்ளானது. பார்ப்பதற்கு நித்யானந்தா சுவாமிகள் போல் தோற்றமளித்த சாமியார் பெயர் பாஸ்கரானந்தா. கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மீக பணி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்க சுமார் ஒன்றரை கோடி வரை முன்பணமாக கொடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதனிடையே கடந்த வாரம் மேற்படி இடத்தில் கட்டப்பட்டுவந்த ஆசிரமத்தில் இருந்து 25 சவரண் தங்க நகைகள் காணாமல் போனதாக பல்லடம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாஸ்கரானந்தா சுவாமிகள் புகார் மனு அளித்தார்.

இந்நிலையில் காலை ஆசிரம கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருப்பதாக பாஸ்கரானந்தா சுவாமிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து பல்லடம் காவல்நிலையத்திற்கு பக்தர்களுடன் நேரில் வந்து ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாஸ்கரானந்தா சுவாமிகள் கூறும் போது செல்வகுமார் என்பவரிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம்.மேற்கொண்டு சுமார் ரூபாய் ஒன்றரைக் கோடி முன் பணமாக கொடுத்து பின்னர் ஆசிரமம் கட்ட ஆரம்பித்ததாகவும், கொரானா தாக்கம் காரணமாக தற்போது மீண்டும் கட்டுமாணப் பணிகள் துவங்கி முடியும் தருவாயில் எந்த முன் அறிவிப்பும் இன்றி வங்கியில் கடன் பெற்றிருப்பதாக வீட்டின் முன்பு அறிவிப்பை ஒட்டி விட்டு சம்பந்தமே இல்லாமல் தனது ஆசிரம கட்டிடங்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு இரவோடு இரவாக மர்மநபர்கள் ஆசிரமத்தை இடித்து சேதப்படுத்தி உள்ளனர்.

இதோடு கருவறையில் வைக்கப்பட்டிருந்த விலை மதிப்புள்ள வைர வைடூரியங்களை திருடிச்சென்றுவிட்டதாக தெரிவித்தார். மேலும் சம்பந்தமே இல்லாமல் தனது ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், தான் சுவாமி நித்யானந்தா போல் போல் இருப்பதால் தன் ஆசிரமம்.மீது தாக்குதல்.நடத்தியிருக்கலாம் என சந்தேகிப்பதாக சுவாமி பாஸ்கரானந்தா தெரிவித்தார்.

மேலும்.காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாவும் ஆவேசமாக தெரிவித்தார். பல்லடத்தில். சுவாமி நித்யானந்தா உருவத்தில் பாஸ்கரானந்தா சுவாமி.தோன்றி காவல்நிலயத்திற்கு புகார் மனு அளிக்க வந்த சம்பவம் பெரும்.பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button